10 பந்தில் 30, 35 ரன்கள் எடுக்க நினைத்திருந்தேன்; டிரெஸ்ஸிங் ரூமில் டீமிடம் சொல்லி இருந்தேன் – பாட்ட நாயகன் விராட் கோலி!

0
3545
Virat kothi

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெங்களூர் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது!

இந்தப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புகள் இருந்தும், டெல்லி அணியின் சுழற் பந்துவீச்சாளர்களிடம் சிக்கி பெங்களூர் அணி 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி இருந்த டெல்லி அணிக்கு இன்று வெற்றி கிடைக்க ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் களம் இறங்கிய டெல்லி அணியை இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆரம்பத்திலேயே அடித்தது பெங்களூர் அணி. இந்தச் சரிவிலிருந்து கடைசி வரை மீள முடியாத டெல்லி அணி இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் 33 பந்துகளில் ஆறு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்தும் மூன்று கேட்சுகள் பிடித்தும் அசத்திய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி பேசுகையில் அவரிடம் மார்ஷ் கேட்ச் குறித்து முதலில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ” பந்து காற்றில் அதிக உயரம் கிளம்பியது. எனவே அதைப் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நான் முதலில் என் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். எனக்கு இதனால் பந்தை பிடிப்பதற்கான இடத்தை தீர்மானிப்பதற்கு நேரம் கிடைத்தது. இது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் மற்ற இரண்டு கேட்ச்கள் எளிமையானவைதான்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய விராட் கோலி
” புல்டாஸ் பந்தில் ஆட்டம் இழந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நான் இந்த முறை மிகவும் நன்றாகவே விளையாடினேன். 50 ரன்கள் எட்டிய பிறகு 10 பந்துகளில் 30 இல்லை 35 ரன்கள் எடுக்க தீர்மானித்து இருந்தேன். வழக்கமாக நான் விளையாடுகின்ற முறையில் இது 200 ரன்களை அணி தாண்டுவதற்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. நான் இரண்டாவது பகுதியில் டிரெஸ்ஸிங் ரூமில் இந்த விக்கெட்டில் 174 ரன்கள் போதுமானதாக இருக்கும் என்று சக வீரர்களிடம் கூறினேன். விளையாடும்பொழுது விக்கெட்டில் வேகம் குறைவதை நான் உணர்ந்தேன்!” என்று விராட் கோலி கூறி இருக்கிறார்!