வெஸ்ட் இண்டீஸ் கூட தோத்தது பெரிய அவமானமா? இந்தியா தரமான அணியே இல்லை-  களத்தில் குதித்த கவாஸ்கர்!

0
660
Gavaskar

இந்திய அணி தற்போது நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்திருக்கிறது!

இதன் காரணமாக இந்திய அணியின் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பெரிய விமர்சனத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்!

- Advertisement -

இந்த தோல்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணுகுமுறையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆன்ஃபீல்டு கேப்டன்சியும்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படுகிறது.

இந்த தோல்விக்கு வெளியிலிருந்து அதிக அளவில் விமர்சனங்கள் வருவதற்கு முக்கிய காரணம், இந்தத் தொடருக்கு முன்னால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் மிகச் சிறிய அணிகளிடம் தோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் நாடு திரும்பி இருந்ததுதான்.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது
“வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியை ஒரு மிகப்பெரிய குறையாக பார்க்க கூடாது. அவர்கள் ஐசிசி டி20 உலக கோப்பையை இரண்டு முறை வென்று இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. மேலும் அந்த அணியில் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்கு மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது. அவர்கள் டாப் கிளாஸ் டி20 அணி. அவர்களிடம் தோல்வி அடைந்ததில் எந்த அவமானமும் கிடையாது.

- Advertisement -

இருப்பினும் இந்தியா தனது பக்கத்தில் வலுப்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும். இந்தத் தொடரில் விளையாடாமல் ஓய்வெடுத்த வீரர்கள் பலர் மேற்கொண்டு பலகாலம் இந்திய அணிக்கு விளையாட போவது கிடையாது. எனவே அவர்களுக்கு மாற்று சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் மிஞ்சிப்போனால் அடுத்த டி20 உலக கோப்பைக்கு ஒரு வருடம்தான் இருக்கிறது.

இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் முக்கிய வீரர்கள் சிலருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுத்திருந்தோம். எனவே இது ஒரு முழுமையான இந்திய டி20 அணி கிடையாது. சில விஷயங்கள் நம்பிக்கை அளித்தது. சில விஷயங்கள் ஏமாற்றம் அளித்தது. குறிப்பாக வீரர்களின் மனோபாவங்கள் ஏமாற்றமாக இருந்தது.

உயர்ந்த மட்ட கிரிக்கெட்டில் மனோபாவம் தான் வீரர்களை பெரியவர்களாகவும் சிறுவர்கள் ஆகவும் பிரித்துக் காட்டுவது. இதை மிகச் சிறப்பாக செய்யக்கூடியது சர்வதேச கிரிக்கெட் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது!” என்று குறிப்பிட்டு கூறியிருக்கிறார்!