என்னோட பேண்ட் திருப்பி போட்டுட்டு வந்ததுக்கு இதான் காரணம்; நல்லா வச்சி செஞ்சிடீங்களே! – விருதிமான் சஹா விளக்கம்!

0
18558

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தனது பேன்ட்டை விருதிமான் சஹா பின்பக்கமாக திருப்பி அணிந்து வந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன் பின்னணி என்னவென்று சஹா விளக்கம் கொடுத்துள்ளார்.

குஜராத் மற்றும் லக்னோ மோதிய போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்ததும் இதில் ஓப்பனிங் இறங்கிய விருதிமான் சஹா 81 ரன்கள் விளாசினார்கள். சுப்மன் கில் 94 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அடுத்ததாக பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே அடித்தது. குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்தபிறகு விருதிமான் சஹா ஓய்வு எடுத்துக்கொண்டு, குஜராத் அணிக்காக கேஎஸ் பரத் கீப்பிங் செய்ய முற்பட்டார். ஆனால் வெளியில் இருந்த நான்காவது நடுவர் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆகையால் மீண்டும் சஹா கீப்பிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவர் பேண்ட்டை மாற்றி அணிந்து வந்த சம்பவம் இன்டர்நெட்டில் ட்ரெண்ட் ஆகிறது.

பேண்ட்டை மாற்றி அணிந்தது கூட தெரியாமல் அவசர அவசரமாக உள்ளே வந்தது எப்படி? உண்மையில் என்ன நடந்தது? என்பதை பற்றி சகா பேசியதாவது:

- Advertisement -

“எனக்கு பதிலாக மாற்று கீப்பர் விளையாடுகிறார் என்பதால் நான் நிதானமாக சாப்பிட்டுவிட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி மருந்து எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் போட்டியின் நடுவர் மாற்று கீப்பருக்கு அனுமதிக்கவில்லை என்பதால் உடனடியாக கீப்பிங் செய்வதற்கு வர வேண்டியதாகிவிட்டது.

அப்போது பேண்ட்டை எப்படி அணிந்தேன் என்றெல்லாம் கவனிக்கவில்லை நேரம் தாழ்த்தக்கூடாது என்று மட்டுமே நினைத்து வேகமாக வேகமாக உள்ளே ஓடி வந்தேன். இரண்டு ஓவர்களுக்கு பிறகு மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் உள்ளே சென்று விட்டேன். மீதமுள்ள ஓவர்களில் கேஎஸ் பரத் மிகச் சிறப்பாக கீப்பிங் செய்தார்.” என்று பேசி உள்ளார் விருதிமான் சஹா.