17ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் ரசிகர்கள் முன்னிலையில் முதல் முறையாக வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த மினி ஏலத்தை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிய தொகையோடு உள்ளே வந்தது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் டேனியல் வெட்டேரி இருக்கிறார். இவர் தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் பயிற்சியாளர் குழுவில் ஒருவராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் ஏலத்தின் முதல் சுற்றில் டிராவிஸ் ஹெட் வந்தார். ஹைதராபாத் அணி இவருக்கு செல்லும் என்று ஏற்கனவே எல்லோரும் கணித்திருந்தார்கள். அதற்கு ஏற்றார் போல் ஹைதராபாத் உடனே சென்றது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் அணி உடன் இவருக்கு போட்டியிட்டது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடிக்கு டிராவிஸ் ஹெட்டை வாங்கியது. டேனியல் வெட்டேரி வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும் தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை 20.50 கோடி கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஏலத்தில் போரையே நடத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தங்கள் அணியின் வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி இருக்கின்ற காரணத்தினால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துவதற்கு சென்றார்.
ஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும், அவமானப்படுத்தும் விதமாகவும், அவரை முன்கூட்டியே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சமூக வலைதள பக்கத்தில் பிளாக் செய்து வைத்திருக்கிறார்கள். எனவே வாழ்த்த சென்றவர், தான் பிளாக் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கும் டேவிட் வார்னருக்கும் இடையே இந்த அளவிற்கு போவதற்கு எது காரணமாக இருக்கிறது என்று இன்னும் யாரும் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது!
SRH have blocked David Warner from Twitter/X and Instagram. pic.twitter.com/ZH3NSQ3yzV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023