டெல்லி 9 ரன்களில் தோத்ததுக்கு காரணமே டேவிட் வார்னர் தான், அவரு அவுட்டாகாம இருந்திருந்தா 50 ரன்கள்ல தோத்திருப்பாங்க – ஹர்பஜன் சிங் விமர்சனம்!

0
180

டேவிட் வார்னர் விரைவாகவே ஆட்டமிழந்ததால் தான் டெல்லி அணியால் இலக்கை இவ்வளவு தூரம் நெருங்க முடிந்தது, இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வந்த டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பில் சால்ட் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் சேர்த்தனர்.

இதில் பில் சால்ட் 59 ரன்களுக்கும் மிச்சல் மார்ஷ் 63 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வரிசையாக டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க பெரிய சிக்கலில் முடிந்தது.

வழக்கம் போல அக்சர் பட்டேல் கடைசியில் வந்து போராடி பார்த்தும் இலக்கை எட்ட முடியவில்லை. 188 ரன்கள் மட்டுமே டெல்லி அணி அடித்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்நிலையில் டேவிட் வார்னரின் பேட்டிங்கை விமர்சித்து, டெல்லி அணி இலக்க இவ்வளவு தூரம் நெருங்க முடிந்ததற்கு காரணமே அவர் விரைவாக ஆட்டம் இழந்தது தான்! இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங். அவர் பேசியதாவது:

“டெல்லி அணி இதற்கு மேலும் கம்பேக் கொடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு காரணம் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். அவர் விரைவாக ஆட்டமிழந்தது தான் டெல்லி அணி இவ்வளவு நெருக்கமாக சென்றதற்கு காரணம். இல்லையென்றால் அவர் 50 பந்துகள் பிடித்து வெறும் 50 ரன்கள் அடித்திருப்பார். அது வீணாகப் போயிருக்கும். இந்த தொடர் முழுவதும் இதுவரை அப்படித்தான் இருந்திருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில் தோல்விக்கு மற்றவர்கள் தான் காரணம் என்கிறார். 300 ரன்கள் அடித்திருந்தாலும் அதில் எந்த முனைப்பும் இல்லை. அணிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அந்த 300 ரன்கள் அடிக்கப்படவில்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் பார்த்தாலே தெரியும், அவரது தரத்திற்கு இந்த சீசனில் ஆடவில்லை என்று.

டெல்லி அணி ஏன் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வார்னர் கண்ணாடியை தான் பார்க்க வேண்டும்.” என்று விமர்சித்து இருந்தார்