வார்னரை அற்புதமான பேட்டர் என்று சொல்லக்கூடாது; கம்பீர் அதிரடி கருத்து!

0
360
Gambhir

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியின் இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசை வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதென தீர்மானித்தது. உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

- Advertisement -

கடந்த ஆட்டத்தை போல் இல்லாமல் இந்த ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்த அணியில் அவர் அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்தார். முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் ஆஸ்திரேலியா எடுக்க டேவிட் வார்னர் 44 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து முகமது சமி பந்துவீச்சில் கீப்பர் கே எஸ் பரத் இடம் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்த ஆட்டத்திலும் டேவிட் வார்னரின் தடுமாற்றம் தொடரவே செய்தது!

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ” வார்னர் இந்த ஆட்டத்தில் விளையாடியதை பார்த்தால் அவர் இந்த ஆட்டத்திலும் தடுமாறினார் என்பது தெளிவாக தெரியும். அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ள அஸ்வினுக்கு மட்டும் அவர் தடுமாறவில்லை முகமது சமி சிராஜ் ஆகியோர்களிடமும் தடுமாறினார். இது அவருக்கு மூன்றாவது இந்திய சுற்றுப்பயணம் மேலும் அவர் 15 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் விளையாடிக் கொண்டிருக்கிறார்!” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இங்கு நிலைமைகள் ஒன்றும் பெரிதான வித்தியாசத்தில் இல்லை. இந்தியா பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் விளையாடும் ஒரு 15 நாளுக்கு முன்புதான் செல்கிறார்கள். ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். ஆனால் வார்னர் இங்கு நிறைய விளையாடி இருக்கிறார் இது எண்ணிக்கையில் மிகப்பெரியது” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா சென்று விளையாடும் பொழுது அவர்களை மதிப்பிடுகிறார்கள். அதுபோல வார்னரை மதிப்பிட்டால் அவர் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக சரியாக விளையாடவில்லை. மேலும் அவர் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவதை விரும்புவதே இல்லை. எனவே நாம் அவரை ஒரு அற்புதமான பேட்டர் என்று சொல்லக்கூடாது. அவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமே அற்புதமான பேட்டர் வெளியில் எங்கும் கிடையாது” என்று கொஞ்சம் கடுமையாகவே கூறியுள்ளார்!