எதே.. டெஸ்ட்ல 8000 விக்கெட், ஓடிஐல 6000 விக்கெட்டா.. யாருங்க அப்படிப்பட்ட பவுலர்??

0
323

வார்னர் அடித்த ரன்களை, தவறுதலாக விக்கெட்டுகள் என டிவியில் ஒளிபரப்பியது இணையதளத்தில் மீம் டெம்ப்லேட்டாக மாறியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது தென்னாபிரிக்கா. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இப்போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்து விட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டேவிட் வார்னருக்கு இது நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும்

போட்டி துவங்குவதற்கு முன்னர் வார்னரின் பேட்டிங் புள்ளிவிவரங்களை ஒளிபரப்பும்பொழுது, அவர் அடித்த ரன்களை தவறுதலாக விக்கெட்டுகள் என தொலைக்காட்சியினர் ஒளிபரப்பி விட்டனர். இதைப் பிடித்துக் கொண்டு இணையவாசிகள் மீம் கன்டென்ட் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

99 டெஸ்ட் போட்டிகளில் 7900 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 6000 விக்கெட்டுகள் என குறிப்பிட்டுவிட்டனர். இவை அனைத்தும் வார்னர் அடித்த ரன்கள் ஆகும். இந்த தவறை பிடித்துக் கொண்டு இணையவாசிகள்,

“யாருப்பா அது.. டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 8000 விக்கெட் வீழ்த்தியுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதைவிட சிறந்த பவுலர்கள் இருந்தால் காட்டுங்கள்.. பார்ப்போம்!.” என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

வார்னரின் இரட்டை சதம்!

வார்னர் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச அளவில் இதை செய்து காட்டிய இரண்டாவது வீரர் வார்னர். இதற்கு முன்னர் ஜோ ரூட் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

வார்னருக்கு நேர்ந்த சோகம்!

மெல்பர்ன் மைதானத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு கூடுதல் ட்ரிங்க்ஸ் பிரேக் விடப்பட்டது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக நீண்ட நேரம் பேட்டிங் செய்து கொண்டிருந்த வார்னருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால், 200 அடித்தவுடன் ரிட்டயர் ஹர்ட் என தெரிவித்துவிட்டு, மருத்துவ சிகிச்சைக்காக பெவிலியன் திரும்பியிருக்கிறார்.