“வார்னர் ஹீரோவா?.. நீ குற்றவாளி!” ஜான்சனுக்கு மைக்கேல் கிளார்க் கோரிக்கை.. என்ன நடந்தது?

0
5009
Clarke

தற்பொழுது பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இரு அணிகளுக்குமே இது முக்கியமான டெஸ்ட் தொடர்.

மேலும் இந்த டெஸ்ட் தொடரில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் டேவிட் வார்னர் விரும்பியபடி அவருக்கு அவருடைய சொந்த மைதானத்தில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் கொடுத்து இருக்கிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இப்படி எல்லாம் தனிப்பட்ட வீரர்களுக்கு நடந்து கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டேவிட் வார்னர் உடன் அணியில் சேர்ந்து விளையாடிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் டேவிட் வார்னரை கடுமையாக தாக்கி இருந்தார். பேட்டிங் ஃபார்மில் இல்லாத அவரை தேர்வு செய்தது தவறு என்றும், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தவறை ஏற்றுக் கொள்ளாதவர் என்றும், இப்படிப்பட்ட ஒருவருக்கு ஹீரோ போன்ற வழியனுப்பு விழா தேவையில்லை என்றும் சாடி இருந்தார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஒருவர் இப்படி டேவிட் வார்னர் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இந்த விஷயம் மெல்ல மெல்ல சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இவர்கள் இருவருமே வழிநடத்திய கேப்டன் மைக்கேல் கிளார்க் இதுகுறித்து கூறும் பொழுது “எந்த ஒரு விளையாட்டு அணியிலும் எல்லோரும் எல்லா நேரத்திலும் கலந்து கொள்வதில்லை. மேலும் எல்லோரும் நண்பர்களாகவும் இருந்து விடுவதில்லை. அவர்கள் இருவருமே வலை பயிற்சிகள் மிக கடினமாக ஒருவருக்கொருவர் இருந்தவர்கள்.

நான் இதை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் ஒன்றாக விளையாடிய காலத்தில் என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாக தெரியாது. எனவே இது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. நான் அவற்றைத் தவற விட்டு இருக்கலாம். மேலும் ஜான்சன் சில காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை.

உங்களுக்கு என்று ஒரு கருத்து இருந்தால், அது அணிக்கு நல்லது என்றால், அதை நீங்கள் தாராளமாக கூறுங்கள். ஆனால் அது தனிப்பட்ட தாக்குதலாக இருக்கக் கூடாது. நான் அப்படி எதையும் செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறேன். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் ஏதாவது பேசினால் அது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!