சாம்பியன்ஸ் டிராபிய இந்தியா ஜெயிக்க.. பைனல்ல ரோகித் செஞ்ச இந்த ஒரு மூவ்தான் காரணம் – வக்கார் யூனிஸ் விளக்கம்

0
319
Rohit

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இறுதிப் போட்டியில் வெல்வதற்கு கேப்டன் ரோஹித் சர்மா செய்த ஒரு பந்துவீச்சு நகர்வு மிகவும் முக்கியமான காரணமாக இருந்தது என பாகிஸ்தான் லெஜன்ட் வக்கார் யூனிஸ் தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என வெளியில் இருந்து பலரும் பேசி வந்தார்கள். குறிப்பாக அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் குல்தீப் யாதவ் இடத்துக்கு ஹர்ஷித் ராணாவை கொண்டு வர வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக செய்த குல்தீப் யாதவ்

இந்த நிலையில் அரை இறுதியில் வென்ற இந்திய பிளேயிங் லெவனை அப்படியே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இறுதி போட்டிக்கு கொண்டு வந்தார்கள். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். ஆனால் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து கொண்டது.

இப்படியான சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பந்துவீச்சில் குள்தீப் யாதவ் மிகப்பெரிய இரண்டு திருப்புமுனைகளை இந்தியாவிற்கு கொடுத்தார். இந்த தொடரில் நியூஸிலாந்து அணிக்கு பேட்டிங்கில் முதுகெலும்பாக இருந்த ரச்சின் ரவீந்தரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி இந்திய அணி கோப்பையை வெல்ல பெரிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

ரோகித் சர்மா செய்த முக்கிய மூவ்

இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் லெஜெண்ட் வக்கார் யூனிஸ் கூறும் பொழுது “இறுதிப் போட்டியில் குல்தீப் யாதவ்தான் முக்கியமான வீரராக இந்திய அணிக்கு இருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் பந்து வீச்சு தாக்குதலுக்கு உள்ளே வந்த பொழுது, அவர் வருவார் என்று யாருமே நினைக்கவில்லை என்பதுதான் உண்மை. அது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக அமைந்ததுதான் முக்கிய விஷயம்”

இதையும் படிங்க : தோனி பாய் செஞ்ச அத மறக்கவே மாட்டேன்.. போய் கேட்டப்பதான் உண்மை தெரிஞ்சது – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

“அவர் எப்பொழுதுமே பந்துவீச்சுக்கு 20 ஓவர்கள் தாண்டி வரக்கூடியவர். இந்த காரணத்தினால் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அவர் முன்கூட்டியே பந்துவீச்சுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. அவர்கள் அக்சர் அல்லது ஜடேஜா வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் கிரிக்கெட் வர்ணனையில் அதையே சொல்லிக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் குல்தீப் யாதவை கேப்டன் ரோகித் சர்மா கொண்டு வந்தது மிகப் பெரிய நகர்வு. அது கோப்பையை வெல்ல பெரிய காரணமாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -