தோனி பாய் செஞ்ச அத மறக்கவே மாட்டேன்.. போய் கேட்டப்பதான் உண்மை தெரிஞ்சது – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

0
114
Dhoni

நடப்பு 2025 18வது ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பேட்ஸ்மேன்களை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பெரிய தொகைக்கு ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை வாங்கியது. மேலும் அவரை கேப்டன் பொறுப்புக்கு தயார்படுத்தும் விதமாக துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு கேப்டனாக ரகானேவை நியமித்திருக்கிறது. அடுத்த வருடம் அவரை கேப்டனாக கொண்டு வர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

தோனி அதை செய்தது ஆச்சரியம்

இந்த நிலையில் தோனியின் கேப்டன்சி அறிவு குறித்து பேசி உள்ள வெங்கடேஷ் ஐயர் கூறும் பொழுது ” ஐபிஎல் தொடரில் நான் சிஎஸ்கே அணிக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஸ்கொயர் லெக்கில் இருந்த ஒரு ஃபீல்டரை எடுத்து ஷார்ட் தேர்டு மேனில் தோனி வைத்தார். பிறகு எனக்கு வீசப்பட்ட பந்தை நான் நேராக அவர் எந்த இடத்தில ஃபீல்டரை வைத்தாரோ அங்கேயே அடித்தேன்”

“பிறகு ஆட்டம் முடிந்ததும் எப்படி சரியாக அந்த இடத்தில் ஃபீல்டரை வைத்தீர்கள்? என நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் பந்தை கட் செய்யும் கோணத்தில், பந்து சரியாக அந்த இடத்திற்கு தான் செல்லும் என்பதை புரிந்து இருந்ததாக கூறினார். பேட்ஸ்மேன்களின் பேட்டிங் கோணம் பற்றிய அவரது அறிவு நமது உலகத்திற்கு வெளியே இருந்தது. நீங்கள் ஒரு கேப்டனாக முதலில் புரிந்து கொண்டிருக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்”

- Advertisement -

அதுதான் தோனியின் தந்திரம்

“இதுதான் தோனியின் தந்திரம். என்னவென்றால் நான் அங்கு அடிப்பதற்கு இரண்டு பந்துகளாக காத்துக் கொண்டிருந்தேன். பிறகு எனக்கு அங்கு அடிப்பதற்கு பந்து வீசப்பட்டது. நான் அதை அடித்ததும் ஆட்டம் இழந்தேன். இரண்டு பந்துகள் கழித்து அங்கு ஒரு பீல்டரை தோனி மாற்றியது கேமராவில் பார்க்க முடிந்தது. ஒரு பேட்ஸ்மேன் ஆக நீங்கள் களத்தில் என்ன மாறுதல்கள் நடைபெறுகிறது என்பதை பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க : பும்ரா கிரிக்கெட் வாழ்க்கை முடியப்போகிறதா.. அவர் இதை செஞ்சே ஆகணும் – கிளன் மெக்ராத் அறிவுரை

” நான் மத்திய பிரதேசம் அணிக்காக விளையாடுகின்ற பொழுது அங்கே மிடில் ஆர்டரில் விளையாடுகிறேன். மேலே ரன்கள் எடுப்பதற்கு தேவையான வீரர்கள் இருக்கிறார்கள். அதுவே கொல்கத்தா அணிக்கு விளையாடும் பொழுது கொஞ்சம் நான் மேலே விளையாட வேண்டும். குறைந்த பந்துகளில் ஒரு 60 ரன்கள் எடுத்துக் கொடுக்க வேண்டும். இல்லை விக்கெட் சரிவு இருந்தால் கொஞ்சம் நிலையாக விளையாடி அணியை தாங்கிப் பிடிக்க வேண்டும். இது அந்தந்த நேர சூழ்நிலைகள் முடிவு செய்கின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -