பும்ராவுக்கு செஞ்சத கோலி ரோகித்துக்கு செய்விங்களா.. அது ரொம்ப திமிரா இருந்துச்சு – கவாஸ்கர் விமர்சனம்

0
406
Gavaskar

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறி சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையையும் அவர் விளாசி இருக்கிறார்.

இந்தியா அணி பவர் பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ரன்கள் எடுத்தது. அடுத்து 89 ரன்களுக்கு மூன்று விக்கெட் மட்டுமே கொடுத்து மிகவும் சிறந்த அடித்தளத்தை உருவாக்கி இருந்தது. ஆனால் தொடர்ந்து பெரிய சாட் விளையாட சென்று இந்திய அணி 19 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணி பேட்டிங்கில் செய்த தவறை இன்றைய பந்துவீச்சாளர்கள் சரி செய்து போட்டியை வென்று கொடுத்தார்கள். மேலும் நேற்றைய போட்டியில் குறைந்த ஸ்கோர் இருந்த பொழுதும் பும்ராவை முதலில் பந்து வீச ரோஹித் சர்மா அழைத்து வரவில்லை. இது தற்பொழுது வெற்றி பெற்றாலும் விமர்சனம் ஆகிறது.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் மிக அரிதாகவே புகழ்பெருகிறார்கள். எனவே அவர்கள் போட்டியில் திரும்பி வந்த விதத்தை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. பும்ரா மூன்றாவது ஓவரை வீசியதற்கு அவர் முதல் ஓவர் வீசி இருக்கலாம் என்று நினைத்தேன். உங்களின் சிறந்த பந்துவீச்சாளர் முதல் ஓவரை வீச வேண்டும்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்ய சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன்கள் வேண்டும் அதனால் முன்பு வந்து விளையாடுகிறார்கள். எனவே உங்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் இருந்தால் அவர் தான் முதலில் வந்து பந்து வீச வேண்டும். இந்தியா பதட்டத்தை சரியாக கையாண்டு வென்றது. பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா நேத்து இத செஞ்சத கவனிச்சிங்களா?.. இதத்தான் அகமதாபாத்தில் பாகிஸ்தான் கூட செஞ்சாரு – இர்பான் பதான் விளக்கம்

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது தான் பேட்டிங்கில் செய்த தவறுகளை காப்பாற்றி போட்டியை வெல்ல வைத்தது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையை எடுத்துக் கொண்டால் அது பொறுப்பற்றதாகவும் கொஞ்சம் திமிர் பிடித்ததாகவும் இருந்தது. அவர்கள் தொடர்ந்து பெரிய ஷாட்டுக்கு சென்று பந்தை காற்றில் அடித்து விக்கெட்டை கொடுத்து அணியை சிக்கலில் வைத்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.