பாகிஸ்தானுக்கு ஒத்தையா வின் பண்ணி கொடுக்க பிளேயர்ஸ் இருக்காங்க.. இந்தியாவ அசால்டா தோக்கடிப்போம் – வக்கார் யூனுஸ் சவால்!

0
166
Waqar

கிரிக்கெட் உலகம் மிக முக்கியமான ஒரு போட்டியை காண்பதற்கு மிக வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கிறது!

சர்வ நிச்சயமாக இந்த ஆண்டு நடைபெற்ற தனி ஒரு போட்டிக்கு இருந்த இருக்கும் மதிப்பில் இந்த போட்டிதான் முதலிடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. வணிக ரீதியாக மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாகவும் பல கோடி மக்கள் இணைந்திருக்கும் ஒரு போட்டி இது!

- Advertisement -

எனவே இருநாட்டு ரசிகர்களும் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அன்றைய நாள் போட்டி நடக்கும் நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் ஸ்தம்பித்து இருக்கும். சாலைகள் வெறிச்சோடி காணப்படும் அளவுக்கு மக்கள் தொலைக்காட்சி முன்பு குவிந்து இருப்பார்கள்.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்பொழுதும் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் எங்கள் காலத்தில் குறைவாக இருந்திருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மிக அதிக அளவில் ஆன போட்டிகளில் நேரடியாக விளையாடினோம். இவ்வளவு அழுத்தம் இருந்தாலுமே இந்த காலத்திய வீரர்கள் இந்த அழுத்தத்தை மிகச் சிறப்பாகவே சமாளிக்கிறார்கள் என்று கூற வேண்டும்.

சமீபத்திய காலத்தை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் அணி அழுத்தத்தை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறது. எனது பார்வையில் நீங்கள் எங்கு விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம் கிடையாது.

- Advertisement -

போட்டி நடக்கும் இடம் இந்தியாவோ பாகிஸ்தானோ நீங்கள் உங்கள் செயல்முறைகளை ஒழுங்காக வைத்திருந்தால் மற்றும் உங்கள் திட்டங்களை போதுமான அளவில் செயல்படுத்தினால் அன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

பாகிஸ்தான் அணியிடம் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களிடம் தனி ஆளாக ஆட்டத்தை வென்று கொடுக்கக்கூடிய மேட்ச் வின்னிங் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பாபர், ஷாகின் மற்றும் பகார் ஜமான் என தனி ஒரு வீரராக போட்டியிட்டு ஆட்டத்தை வென்று கொடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் இமாம் நல்ல இன்னிங்ஸ் விளையாடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். பாகிஸ்தானிடம் நிச்சயமாக வெல்வதற்கு தேவையான வளங்கள் எல்லாமே இருக்கிறது. இப்போது இருக்கும் விஷயங்களை மிகச் சரியாக ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும் அவ்வளவுதான். எனவே நாங்கள் உலக கோப்பையில் இந்தியாவை மிக எளிதாக வீழ்த்துவோம்!” என்று கூறியிருக்கிறார்!