ரன் அவுட் வேணும்; ஓவர் த்ரோ வேணாம்; சிராஜ் சுவாரசிய வாக்குவாதம் – வீடியோ இணைப்பு

0
359
Siraj

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் உள்நாட்டில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் ஷிகர் தவான் தலைமையில் மோதி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தது!

இன்று தொடரின் இரண்டாவது வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியோடு ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் மோதி வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ருதுராஜ் மற்றும் ரவி வெளியே போய் சபாஷ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் உள்ளே வந்து இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா மற்றும் சம்சி வெளியே போய் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் நோர்க்கியா வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க வீரர்கள் ஏமாற்றம் தர, ரிசா ஹென்றிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் சிறப்பான அரை சதங்கள் அடித்து 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியை 278 ரன்கள் எட்ட வைத்தார்கள். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் செய்து 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் இறுதி கட்டத்தில் கேஷவ் மஹராஜ் மற்றும் மில்லர் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது, முகமது சிராஜ் கேஷவ் மஹராஜ்க்கு வீசிய பந்து கீப்பர் சஞ்சு சாம்சன் இடம் சென்றது. அந்தப் பந்தை பிடித்த சாம்சன் சிராஜ்க்கு வீச, அந்தப் பந்தை பிடித்த சிராஜ் எதிர்முனையில் மில்லர் வெளியே இருப்பதைப் பார்த்து ரன் அவுட் செய்ய பந்தை அடித்தார். பந்து குறி தவறி எல்லைக் கோட்டை நோக்கி சென்று பவுண்டரி ஆகிவிட்டது. அதை கவனித்த அம்பயர் பவுண்டரி தந்தார். ஆனால் சிராஜ் தான் தந்தை சும்மா வீசி எறிந்தது போல் ” எதற்காக பவுண்டரி தந்தீர்கள்” என்று அம்பயர் இடம் வாக்குவாதம் செய்ததை பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

தற்பொழுது இந்திய அணி இந்த இலக்கை நோக்கி இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரது அரைச்சதங்களுடன் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது!

- Advertisement -