உலக கோப்பை வேணுமா?.. தோனி யுவராஜ கூப்பிடுங்க.. இதை செய்யுங்க – கில்கிரிஸ்ட் மாஸ் ஐடியா!

0
2129
Dhoni

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை முதன் முதலில் கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டு வென்றது. அப்பொழுது இந்திய அணி குறித்து யாருக்கும் எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை.

இதற்கு அடுத்து ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை குறித்து இந்திய அணி பற்றிய எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதை எட்டக்கூடிய வாய்ப்பு 2003 ஆம் ஆண்டுதான் வந்தது. அந்த வாய்ப்பில் இறுதிப் போட்டியில் கங்குலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து 2011ம் ஆண்டுதான் சரியாக 28 வருடங்கள் கழித்துதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடிந்தது. கேப்டனாக முன் நின்று அணியை மகேந்திர சிங் தோனி மிகச் சிறப்பாக வழிநடத்த, பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் 482 ரன்கள் குவித்தார்.

அதே சமயத்தில் யுவராஜ் சிங் 357 ரன்களை குவித்ததோடு 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். மேலும் ஜாகிர் கான், முனாப் பட்டேல் என்று சத்தம் இல்லாத பல ஹீரோக்கள் உள்ளே இருந்தனர். இதன் காரணமாக இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

தற்பொழுது மீண்டும் இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக அருகில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய ரசிகர்கள் இந்திய அணி மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் “இந்தியாவில் விளையாடுவது மற்றும் இந்திய வீரராக எப்படி இருப்பது என்பது குறித்து என்னால் சரியாக சொல்ல முடியாது.
அது எப்பொழுதுமே புதிரான ஒன்று.

நான் இந்திய அணியில் இருந்தால் கடந்த உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த சச்சின், தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை தங்களுடைய உலகக் கோப்பை அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்பேன். போட்டியை பற்றி வெளிப்படையாக பேசுமாறு கூறியிருப்பேன்.

- Advertisement -

விராட் கோலி அந்த அணியில் முக்கிய அம்சமான வீரராக இல்லாமல் தொடர்ந்திருந்தார். சொந்த மண்ணில் அவர்கள் உலகக் கோப்பையை எப்படி விளையாடி வென்றார்கள்? என்பதை, அந்த அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற நான் முயற்சி செய்திருப்பேன். நீங்கள் அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால், வெளிப்புற சத்தங்களை அனுமதிக்காமல் உங்களால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும்.

உலகக் கோப்பைக்கான மற்ற அணிகளின் தயாரிப்பை பார்க்கும் பொழுது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் தயாரிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டு அணிகள்தான் நிச்சயமாக உலகக் கோப்பை பட்டத்திற்காக போராடும்!” என்று கூறியிருக்கிறார்!