இந்திய டெஸ்ட் அணியில் கம்பீர் சொல்வதை குறிப்பிட்ட காரணத்திற்காக இந்திய பேட்ஸ்மேன்கள் கேட்க மாட்டார்கள் என்றும், இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ஒருவரை கொண்டு வர வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக 8 டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு போட்டியை மட்டுமே வென்று இருக்கிறது. கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக மூன்று வடிவங்களுக்கும் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா பல்வேறு வகையில் மோசமான சாதனைகளையும் பல்வேறு வரலாற்றுத் தோல்விகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மான்டி பனேசர் கூறும் பொழுது ” இரண்டு பயிற்சியாளர்களை கொண்டு வருவது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதனால் கம்பீர் பணிச்சுமை குறையும். தற்பொழுது அவருக்கு இது அதிகமாக இருக்கிறது. நான் முன்பு அவருடைய சக வீரராக இருந்தேன். தற்போது வீரர்கள் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சொல்லக்கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். இந்த மாற்றம் கடினமான ஒன்றாக இருக்கலாம்”
“மேலும் கம்பீர் சாதனை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெரிதாக இல்லை. ஆஸ்திரேலியாவில் அவருடைய ரன் சராசரி 23 ஆக இருக்கிறது. இங்கிலாந்திலும் பெரிய அளவில் எதுவும் இல்லை. பந்து நகரக்கூடிய கண்டிஷன்களில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை”
“எனவே இந்திய டெஸ்ட் அணிக்கு எல்லா கண்டிஷன்லிலும் நன்றாக விளையாடிய ஒருவரை பயிற்சியாளராக கொண்டுவர வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட ஒருவரை கொண்டு வரும்பொழுது இயல்பாகவே வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். கம்பீர் இந்த பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே விவிஎஸ் லட்சுமணன் போன்ற ஒருவரை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இந்திய டெஸ்ட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவாவது அவரை கொண்டு வர வேண்டும்”
இதையும் படிங்க : சச்சின் மகன் அர்ஜுன்.. என்னிடம் தொடர்ந்து பயிற்சிக்கு வராத காரணம் இதுதான் – யோக்ராஜ் சிங் பேட்டி
“லக்ஷ்மன் ராகுல் டிராவிட் போல எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடியவர். நீங்கள் பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் டாப் ஆப் தி பால் விளையாட கூடாது என்று அவர் சொன்னால் அதை வீரர்கள் கேட்பார்கள். ஏனென்றால் அவர் அதைச் செய்திருக்கிறார். இதுவே கம்பீர் சொல்லும் பொழுது வீரர்கள் கேட்டுக்கொண்டு ஆனால் களத்தில் அவரவர் வழியில் விளையாடுவார்கள். எனவே இந்த மாற்றம் தேவையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.