சச்சின் மகன் அர்ஜுன்.. என்னிடம் தொடர்ந்து பயிற்சிக்கு வராத காரணம் இதுதான் – யோக்ராஜ் சிங் பேட்டி

0
528
Yograj

இந்திய அணியின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னிடம் ஏன் பயிற்சிக்கு வருவதை நிறுத்தினார் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் காரணம் கூறியிருக்கிறார்.

இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆரம்ப காலகட்டங்களில் இருந்து அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். தனது மகனாக இருந்தாலும் பயிற்சியில் மிகவும் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர். மேலும் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அவர் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

12 நாட்களில் முடிந்த கதை

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2022 ஆம் ஆண்டில் 12 நாட்கள் மட்டும் யோக்ராஜ் சிங்கிடம் பயிற்சிக்கு சென்றார். மேலும் அந்தக் காலகட்டத்தில் தனது அறிமுக ரஞ்சிப் போட்டியில் கோவா அணிக்காக சதம் அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இவருடைய தந்தை சச்சினும் தனது அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெறும் 12 நாட்களில் யோக்ராஜ் சிங்கிடம் பயிற்சியை அர்ஜுன் டெண்டுல்கர் நிறுத்திக் கொண்டார். மேலும் பயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கரை சச்சின் மகன் என்பதை மறந்து விடுமாறும், தன்னிடம் பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று யோக்
ராஜ் சிங் கூறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் வெளியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பயிற்சிக்கு வராத காரணம் இதுதான்

இது குறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது ” சச்சின் மகன் என்னிடம் வெறும் 12 நாட்கள் பயிற்சிக்கு வருகிறார். இந்த பயிற்சி காலகட்டத்தில் அவர் ரஞ்சியில் தனது அறிமுகப் போட்டியில் சதம் அடிக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டி விளையாடும் பொழுது, அவருடைய பெயர் என்னுடைய பெயருடன் இணைத்து பேசப்பட்டு விடும் என சிலர் பயந்தார்கள். நான் என்ன விஷயம் சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா?”

இதையும் படிங்க : விராட் கோலியை பார்முக்கு கொண்டுவர.. பாகிஸ்தான் அணி பற்றி இந்த விஷயத்தை சொல்லுங்க – சோயப் அக்தர் கருத்து

” மக்கள் என் பெயருடன் அவருடைய பெயர் ஒட்டிக் கொள்வதை பார்த்து பயந்தார்கள். நான் யுவராஜ் சிங்கை அழைத்து சச்சின் டெண்டுல்கரிடம் அர்ஜுன் டெண்டுல்கரை என்னிடம் ஒரு வருடம் கொடுக்குமாறு சொல்ல சொன்னேன். பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -