இந்திய கிரிக்கெட்

கம்பீர் இன்னும் இந்த பையன் எவ்வளவு ரன் அடிச்சா செலக்ட் பண்ணுவீங்க?.. இது பெரிய அநீதி – ஆகாஷ் சோப்ரா

​இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள தொடரில் கேகேஆர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது குறித்தும், அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

​முன்னணி உள்நாட்டு போட்டிகளில் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் ரிங்குங்கை, லிமிடெட் ஓவர் ஃபார்மட் பிளேயர் என்று மட்டுமே முத்திரை குத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரைத் தேர்வாளர்கள் பரிசீலிக்காமல் இருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. ரஞ்சி டிராபியில் மிகச் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் வைத்து தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் போதிலும், இந்திய டெஸ்ட் அணியின் பேக்கப் பேட்டராகக் கூட அவர் வளர்க்கப்படவில்லை.

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ரிங்கு சிங், எனது சகோதரர், அவர் இன்னும் எத்தனை ரன்கள் தான் அடிக்க வேண்டும்? தான் விளையாடிய கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் நான்கு செஞ்சுரிகளை அவர் அடித்துள்ளார். அணியில் உள்ள அனைவரும் அவுட் ஆன போதிலும், அந்த மனிதன் மட்டும் தனியாக நின்று 118 ரன்கள் அடித்தார். குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ்கள் விளையாடிய வீரர்களில் அதிக ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆவரேஜ் வைத்துள்ள வீரர்களின் பட்டியலை நான் பார்த்தேன், அதில் சர் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். சர்ஃபராஸ் கானின் பெயரும் அங்கு உள்ளது. ரிங்கு சிங் 78 இன்னிங்ஸ்களில் 61.33 ஆவரேஜ் வைத்துள்ளார். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது, ரிங்கு சிங்கிற்கு நாம் சரியான நீதியைத் தான் செய்கிறோமா? அவர் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது” என்று ஆரம்பித்து,

​”சில நேரங்களில் நாம் ஒரு வீரரை ஒயிட் பால் ஃபார்மட் பிளேயர் என்று பிராண்ட் செய்து முத்திரை குத்தி விடுகிறோம், மேலும் அங்கேயும் கூட அவருக்கு முழு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. என் கருத்துப்படி, வேர்ல்ட் கப் தொடருக்குப் பிறகும் அவருக்கு தவறான சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரை லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைத்தீர்கள், சொல்லப்பட்ட அனைத்தையும் அவர் செய்தார். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ரன்களைக் குவித்தார். அதற்குப் பிறகு திடீரென்று அவரை வெளியேற்றி விட்டீர்கள், இப்போது அவர் வெளியிலேயே இருக்கிறார். மற்றவர்கள் வந்து விளையாடுகிறார்கள், ஆனால் அந்த மனிதன் மட்டும் வெளியில் அமர்ந்திருக்கிறார்” என்று தொடர்ந்து,

- Advertisement -

​”தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் 3வது இடத்திலும், சுப்மன் கில் 4வது இடத்திலும், ரிஷப் பண்ட் 5வது இடத்திலும், துருவ் ஜூரெல் 6வது இடத்திலும் விளையாடுகிறார்கள். ஏழாவது இடத்தில் யார் இருக்கிறார்கள்? நாம் யாருக்கும் பயிற்சி அளித்து பேக்கப் வீரராக உருவாக்கவில்லை. நாங்கள் இப்போது தான் சர்ஃபராஸ் கானை அனுப்பினோம், ஆனால் அவர் விளையாட வைக்கப்படவில்லை. ரிங்கு சிங் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts