இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் நடத்த முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது.மேலும் இந்த டி20 உலகக் தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றார்கள். மேலும் பதவிக்காலம் முடிந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். இவர்கள் குறித்து இந்திய முன்னாள் விவிஎஸ் லக்ஷ்மன் தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
விவிஎஸ் லக்ஷ்மன் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் தலைவராக இருக்கிறார். மேலும் இந்தியாவின் இரண்டாவது கட்ட அணி விளையாட வேண்டிய சூழ்நிலை வரும் பொழுது பயிற்சியாளராகவும் அந்த அணியுடன் செல்கிறார்.
தற்போது அவர் ஜிம்பாவேவில் இந்தியாவின் இரண்டாம் கட்ட அணி விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பயிற்சியாளராக சென்று இருக்கிறார். அங்கிருந்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியும் அதன் வீரர்கள் குறித்தும் தன்னுடைய வாழ்க்கையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விவிஎஸ் லக்ஷ்மன் கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் வழங்கி இருக்கிறார்கள். இதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். மேலும் இவர்கள் இளைஞர்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து சிறப்பாக செய்து வந்த விதத்திலேயே எல்லாவற்றையும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
ராகுல் டிராவிட் உடன் நான் பல ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். ஆனால் அவர் இவ்வளவு உணர்ச்சிகளை காட்டி நான் பார்த்ததில்லை. அவர் கடைசி ஓவரின் போது பயிற்சியாளர் குழு உடன் பேசிக்கொண்டு இருந்தது, கோப்பையை அவரிடம் ஒப்படைத்த பொழுது அவர் காட்டிய உணர்ச்சிகள் என்று எல்லாமே அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது. மேலும் அணியில் இருந்த ஊழியர்களுக்கு வரை அது அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது
இதையும் படிங்க : என் பயிற்சியில வீரர்கள் சுயநலமா இருக்கவே கூடாது.. இன்னொரு விஷயத்தை செஞ்சே ஆகணும் – கம்பீர் பேட்டி
அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். அதை பார்க்கும் பொழுது அந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என்றும், அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹர்திக் பாண்டியா உடைந்து அழுதார். ராகுல் டிராவிட் உலகக் கோப்பையை ஏந்தி கொண்டாடிய விதம் ஆச்சரியப்படுவதாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.