என் பயிற்சியில வீரர்கள் சுயநலமா இருக்கவே கூடாது.. இன்னொரு விஷயத்தை செஞ்சே ஆகணும் – கம்பீர் பேட்டி

0
182
Gambhir

இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக கவுதம் கம்பீர் இந்திய அணி பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.

கவுதம் கம்பீர் இதற்கு முன்பு எப்படி சில விஷயங்களில் மிகவும் கண்டிப்பாக வீரர்கள் எப்படி இருக்க வேண்டும்? என பேசி வந்தாரோ, தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்த பிறகும் அதே போல்தான் இருக்கிறார். மிக சீரியசான விஷயங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

கவுதம் கம்பீர் தன்னுடைய பேட்டியில் “காயங்கள் விளையாட்டு வீரர்களின்வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கிறது. நீங்கள் மூன்று வடிவங்களில் விளையாடி காயம் அடைகிறீர்கள் என்றால், நீங்கள் சென்று திரும்பி குணம் அடையலாம். பிறகு நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் திரும்ப வந்து மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும். ஒரு வீரரை நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு தக்கவைத்து, அவருடைய காயம் மறுவாழ்வு மற்றும் பணிச்சுமை எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொள்வோம்.

தொழில்முறை வீரர்களை பாருங்கள் அவர்களுக்கு எப்பொழுதும் சிறிய இடைவெளி மட்டும்தான் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும் பொழுது உங்களால் முடிந்த வரையில் விளையாட வேண்டும். நீங்கள் நல்ல ஃபார்மில் இருந்தால் நீங்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும்.

- Advertisement -

எப்படி விளையாட வேண்டும்? என்று சொல்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. நீங்கள் முடிந்தவரை உங்களுடைய விளையாட்டுக்கு நேர்மையாக இருங்கள்.நீங்கள் அதைச் செய்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும். நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பொழுது எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் எதையும் நினைக்கவில்லை. என்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன்.

முழு உலகமும் உங்களுக்கு எதிராக இருக்கிறது என்று நினைத்தாலும் கூட, நீங்கள் உங்களுடைய கொள்கையில் எப்பொழுதும் உறுதியாக இருங்கள். சில மதிப்பான விஷயங்களை செய்து வாருங்கள். நீங்கள்சரியான விஷயங்களுக்காக முயற்சி செய்யுங்கள். உங்கள் இதயம் அணிக்காக நீங்கள் நேர்மையாக இருப்பதை நம்ப வேண்டும்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீமை விட்டு வெளியேறிய ஷாகின் அப்ரிடி.. செய்த தப்புக்கு தண்டனையா? – கோச் கில்லெஸ்வி விளக்கம்

நான் களத்தில் ஆக்ரோஷமாக இருந்து மக்கள் உடன் மோதி இருக்கலாம் ஆனால் அது அணியில் வெற்றிக்காக மட்டுமே. ஏனென்றால் இறுதியில் அணிதான் முக்கியம் தனிநபர் கிடையாது. எனவே நீங்கள் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணியின் வெற்றிக்காக மட்டுமே சிந்தியுங்கள். இதுதான் எப்பொழுதும் அணி விளையாட்டின் தேவை. இது உங்களுடைய சுயத்தைப் பற்றி சிந்திக்கும் தனி விளையாட்டு கிடையாது. எனவே இங்கு அணிதான் முதலில் வரும். நீங்கள் கடைசியாகத்தான் வருவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -