இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
36 வயதாகும் புவனேஷ்வர் குமார் சமீபத்தில் நடந்த ஐபிஎல் மற்றும் யுபி டி20 லீக் தொடர்களில் மிகவும் சிறப்பாக பந்துவீசி தனது சிறந்த ஃபார்மை நிரூபித்துள்ளார்.
அவரது இந்தத் தொடர்ச்சியான திறமையான ஆட்டத்தின் காரணமாக, அவரை மீண்டும் இந்திய தேசிய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ராஜீவ் சுக்லா பேசும்போது “புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சு செயல்திறனை தேர்வாளர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். அவர் தற்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், மேலும் தேர்வாளர்கள் அவரை பரிசீலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.” என்று ஆரம்பித்து “இறுதி முடிவை எடுப்பது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது, இருப்பினும் அவரது சிறந்த ஆட்டத்திற்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.






