இந்திய கிரிக்கெட்

34 பவுண்டரி 2 சிக்ஸ்.. சேவாக் மகன் மாஸான சம்பவம்.. என் பையன் தோனி ஆகணும்.. தந்தை விருப்பம்

நடைபெற்று வரும் கூச் பெஹார் டிராபியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யாவீர் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் உலகக் கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அச்சமில்லாமல் விளையாடி புதிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரேந்திர சேவாக் தன்னுடைய 15 வயதான மகனையும் கிரிக்கெட் வீரராக உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

229 பந்தில் சம்பவம்

தற்போது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்படும் கூச் பெஹார் டிராபியில் ஷில்லாங்கில் அமைந்துள்ள எம்சிஏ மைதானத்தில் மேகாலயா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே டெல்லி அணிகளுக்கு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய டெல்லி அணிக்கு விளையாடிய வீரேந்திர சேவாக்கு மகன் ஆர்யாவீர் அபாரமாக விளையாடி 229 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதில் மொத்தம் 34 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். தந்தையைப் போலவே இவருடைய ஆட்டமும் மிகவும் ஆக்ரோஷமாகவும் தைரியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என் மகன் தோனி விராட் கோலி போல வரவேண்டும்

தன் மகன் குறித்து வீரேந்திர சேவாக் பேசும் பொழுது “என் மகனில் நான் இன்னொரு சேவாக்கை பார்க்க விரும்பவில்லை. அவர் இன்னொரு தோனியாகவோ, விராட் கோலியாகவோ, ஹர்திக் பாண்டியாகவோ வரட்டும். மேலும் அவர் கிரிக்கெட் வீரராக தான் வர வேண்டும் என்பதும் கூட எனக்கு கிடையாது. அவர்தான் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறாரோ அதற்கான சுதந்திரம் அவரிடம் இருக்கிறது. அவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் உதவியாக இருப்பேன்”

இதையும் படிங்க : பெரிய பேர் இருந்தா போதுமா..அஸ்வின் வேண்டாம்.. இந்த பையன ஆட வைங்க – மஞ்ச்ரேக்கர் கோரிக்கை

“முன்பு போல் இந்திய அணியில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால் இடம் கிடைப்பதில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம் கிடைக்கிறது. எனவே என்னுடைய மகன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் குழந்தைகள் ஐபிஎல்-காக தங்களை தயார்படுத்த உழைக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by