பெரிய பேர் இருந்தா போதுமா..அஸ்வின் வேண்டாம்.. இந்த பையன ஆட வைங்க – மஞ்ச்ரேக்கர் கோரிக்கை

0
118
Ashwin

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாட வைக்க கூடாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு துவங்க இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் போட்டியாக இது அமைந்திருக்கிறது.

- Advertisement -

அறிவிக்கப்பட்டிருக்கும் சுழல் கூட்டணி

இந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் மொத்தமாக விரல் சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்ற இருக்கிறார்கள். மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் யாருக்கும் 15 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கப்படவில்லை.

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இடம்பெற்றிருக்கும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களும் ஆல் ரவுண்டர் வரிசையில் வருகிறார்கள். எனவே இவர்களது பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் முக்கிய கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

- Advertisement -

அஸ்வின் இந்த காரணத்தால் வேண்டாம்

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” கடந்த முறை ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்த முறையால் சிட்னியில் தோற்க வேண்டிய போட்டியை நாம் டிரா செய்தோம். ஆனால் பொதுவாக வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் அது இந்தியாவில் அவர் விளையாடுவது போல சிறப்பாக இருந்ததில்லை. வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் அவருடைய பேட்டிங்கில் பெரிய வித்தியாசம் இருக்கிறது”

இதையும் படிங்க : முன்னாள் கோச்சா சொல்றேன்.. கம்பீர் இப்படி இருங்க.. இதை செய்தா ஆஸி அணியை ஜெயிக்கலாம் – ரவி சாஸ்திரி அறிவுரை

“இந்த நிலையில் எப்பொழுதும் மக்கள் வீரர்களின் பெயர்கள் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை மட்டுமே தேர்வு செய்யப்படுவதில் பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு விஷயமே கிடையாது. ஒரு வீரர் என்ன மாதிரியான ஃபார்மில் இருக்கிறார் என்பதை பார்த்து அணியில் சேர்க்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு ஒரு ஸ்பின்னர் ஆகவும் பேட்டிங் நல்ல முறையில் செய்யக் கூடியவராகவும் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -