இந்திய கிரிக்கெட்

நான் சச்சின் பேட்டிங் பாணியை பின்பற்றுகிறேன்.. அதற்கு பின்னால் இந்த முக்கிய காரணம் இருக்கிறது – டெம்பா பவுமா பேட்டி

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தனியாக போராடி சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய பேட்டிங் பாணியை சச்சின் போல அமைத்துக் கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா சீக்கிரத்தில் முக்கிய விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 150 ரன் கடினம் என்று இருந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் மற்றும் ஒரு முனையில் நிலைத்து நின்று போராடினார்.

இவருக்கு பக்க பலமாக இருந்த யான்சன் மற்றும் சைமன் ஹார்மர் இருவரும் 85 மற்றும் 83 ரன்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இன்னொரு முனையில் அபாரமாக விளையாடிய டெம்பா பவுமா சதம் அடித்து 179 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தொண்ணூத்தி ஒன்பது ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி, மேலும் ஃபாலோ ஆன் பெற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் பாணி பற்றி பேசி உள்ள டெம்பா பவுமா “நான் நல்ல உயரம் கொண்ட பேட்ஸ்மேன் கிடையாது. எனவே நான் பந்தை உடலுக்கு அருகில் வைத்து விளையாடவே முடிவு செய்திருக்கிறேன். அப்பொழுதுதான் என்னால் கட்டுப்பாட்டுடன் விளையாட முடியும். நான் இந்த வகையில் சச்சின் பேட்டிங் பாணியை பின்பற்றுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by