என்கிட்டயே அட்வைஸ் கேட்டுட்டு.. எங்க பாகிஸ்தானையே இந்த இந்திய வீரர் விமர்சிக்கறார் – வாசிம் அக்ரம் பேட்டி

0
0

​முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

​இர்பான் பதான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு பல விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

​ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இர்பான் பதான், எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

​இதுகுறித்து வசீம் அக்ரம் பேசும்போது “இர்பான் பதான் முதன்முதலில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது என்னைச் சந்தித்தார், அவர் என்னுடைய பெரிய ரசிகராக இருந்தார், அவருக்கு நான் சில பந்துவீச்சு ஆலோசனைகளை வழங்கினேன். அவர் நல்ல மனிதர், என்னை சந்தித்து பேசக்கூடியவர், ஆனால் அவர் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார், அதற்கு நமது ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து அவர் பேசும்போது “இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமே, அதில் யாராவது ஒருவர் வெல்வார்கள் ஒருவர் தோற்பார்கள், ரசிகர்கள் அதை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -