நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி வெறும் 26 பந்தில் 78 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இவரது அபார பேட்டிங் திறமை குறித்து வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.
மேலும் இதற்கு முன்பாக கடந்த போட்டியில் உலகின் தலைசிறந்த பவுலர் பும்ராவின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள எளிதாக அடித்து ஆச்சரியப்படுத்தினார். நேற்று ஹேசில்வுட் வீசிய ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் ஷர்மா கிடையாது
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது ” மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடும் பொழுது நாம் ஏன் வைபவ் சூரியவன்சி பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறோம் என மக்கள் கேட்கிறார்கள். இதற்கு காரணம் ஒன்றுதான், அவர் உண்மையாகவே சிறப்பாக விளையாடுகிறார். 15 வயதில் இவர் அடிக்கும் ரன்கள் பல அனுபவம் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட செய்ய முடியவில்லை”
“உதாரணத்திற்கு அபிஷேக் ஷர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் அவரும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்தான். ஆனால் நாம் அவரை ஆபத்தான வீரர் என்று அழைப்பதில்லை. ஆனால் இந்த பையனை ஆபத்தான வீரர் என்று சொல்கிறோம். அவர் மைதானத்தில் என்ன செய்து காட்டுகிறார் என்பதை வைத்து இப்படி சொல்கிறோம்”
எல்லோரையும் அடிக்கிறார்
“இந்த பையன் ஏதோ ஒரு போட்டியில் அதிசயத்தை செய்து காட்டக் கூடியவனாக இல்லை. கடந்த போட்டியில் பும்ராவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி 13 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவர் சிறப்பாக விளையாடுவது சிறிய அணிகளுக்கு எதிராக, சிறிய வீரர்களுக்கு எதிராக இல்லை. அவர் ஒரு குழந்தையாக இருந்தாலும் பெரிய வீரர்களை நேரடியாக அடித்து விளையாடுகிறார்”
இதையும் படிங்க : நாங்க எதுவும் மோசமா பண்ணல.. ஒரே பிரச்சனை சூரியவன்சி மட்டும்தான்.. தோல்விக்கு காரணம் இதுதான் – ரஜத் படிதார் பேச்சு
“அவர் இவ்வளவு அதிரடியாக விளையாடி சீக்கிரத்தில் ஆட்டம் இழக்கும்போது நாம் கண்டிப்பாக அதை விமர்சிக்க செய்வோம். அவர் இன்னும் சிறிது நேரம் விளையாடி இருக்க வேண்டும் என்று கூறுவோம். ஆனால் அவர் சிறப்பாக விளையாடும் பொழுது நாம் அவரை பாராட்ட வேண்டும். இப்போது கூட நாம் போதுமான அளவுக்கு பாராட்டவில்லை” என்று கூறி இருக்கிறார்.






