நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி பவர் பிளேவில் விளையாடிய விதம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு ஓவர்கள் மீதம் வைத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூரியவன்சி தந்த மாற்றம்
இந்த போட்டி குறித்து ரஜத் படிதார் பேசும்போது ” நாங்கள் போட்டியை ஆரம்பித்தது விதத்திலும், விக்கெட்டுகளை இழந்த விதத்திலும், இறுதியில் 201 ரன்கள் எடுத்தது பாசிட்டிவான விஷயம். ஆனால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக வைபவ் விளையாடிய விதம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டதாக நான் நினைக்கிறேன்”
“வெங்கடேஷ் ஐயரை இம்பேக்ட் பிளேயராக கொண்டுவர வேண்டிய சூழல் இருந்தது. கடந்த போட்டிகளில் எங்கள் அணியின் அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு போட்டியாக அமைந்தது”
சுயாஸ் பிரச்சனை இல்லை
“நேற்று இம்பேக்ட் பிளேயராக சுயஸ் சர்மாவை கொண்டுவர முடியாதது பிரச்சனை கிடையாது. க்ருனால், செப்பர்டு, வெங்கடேஷ் ஐயர் மூன்று பேரை வைத்து அந்த ஓவர்களை மேனேஜ் செய்திருக்க முடியும். அது பெரிய விஷயம் இல்லை”
இதையும் படிங்க : நான் கொஞ்ச நேரம் அவுட் ஆகாம இருந்து ஆர்சிபிய முடிச்சு இருக்கணும்.. கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன் – வைபவ் சூரியவன்சி பேச்சு
“ஐபிஎல் போன்ற அதிகபட்ச திறமைகள் விளையாடும் இடத்தில் தவறுகள் நடப்பது இயல்பானது. முக்கியமானது நாம் அதை எப்படி பார்க்கிறோம்; அதிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.






