ஆசியா கப் பைனல்.. செபாலி-மந்தனா மாஸ் பேட்டிங்.. இந்திய அணி சாம்பியன்.. இலங்கை பரிதாபத் தோல்வி

0
0

​மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் ஃபைனல் மேட்ச்சில் இலங்கை மகளிர் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

​இந்த மேட்ச்சில் ஃபர்ஸ்ட் பேட்டிங் செய்த இந்திய டீமில் ஓப்பனர்களாக களம் இறங்கிய சஃபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும், சுமிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து அதிரடி ஃபார்மை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

​இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப் மற்றும் அதிரடி பேட்டிங் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை சேர்த்தது.

​அடுத்து 184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை டீமில் அதிகபட்சமாக கேப்டன் சாமரி அத்தப்பத்து 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

​இந்திய அணியின் பௌலிங் தரப்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியை 111 ரன்களில் ஆல்-அவுட் செய்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற உதவினர்.

- Advertisement -