நேற்று அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை தனி ஒரு வீரராக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் வெற்றி பெற வைத்தார். இந்த இன்னிங்ஸ் குறித்து வீரேந்தர் சேவாக் பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி 77 ரன்னுக்கு முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 100 ரன்கள் தாண்டியதும் அக்சர் படேல் ஏழாவது விக்கெட்டாக வெளியேறிவிட்டார். ஆனால் சூரியகுமார் யாதவ் தனி ஒரு வீரராக நின்று 49 பந்தில் 84 ரன்கள் எடுத்து இந்திய அணியை 161 ரன்னுக்கு எடுத்துச் சென்றார்.
சூரியகுமார் தெரிவித்த கருத்து
நேற்றைய போட்டி முடிவுக்கு பின்னால் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் பதினான்காவது ஓவர் இடைவேளையின் போது உள்ளே வந்த பயிற்சியாளர் கம்பீர் தன்னிடம் இறுதிவரை நின்று விளையாடு மாறும் தேவைப்பட்டால் ரன் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.
இத்துடன் தான் மும்பை வீரர் என்பதால் இங்கு உள்ள ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்று தனக்குத் தெரியும் என்றும், எனவே தானும் இறுதிவரை நின்று விளையாட முடிவு செய்து இருந்ததாகவும் கூறியிருந்தார். இதன்படியே நேற்று இறுதிவரை நின்று 49 பந்தில் 83 ரன்கள் குவித்தார்.
சிறந்த இன்னிங்ஸ் இதுதான்
இந்த நிலையில் இந்தியா அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி ஆட்டக்கார வீரேந்தர் சேவாக் நேற்று சூரியகுமார் ஆடிய பேட்டிங் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். அதில் இதுதான் அவருடைய தொழில் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 160 ரன் இந்தியா ஆடாம தந்தாலும் எடுத்துக்குவோம்.. ஈஸியா ஜெயிச்சிருப்போம் – மோனன்க் படேல் வருத்தம்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “இந்த இன்னிங்ஸ் சூரியகுமார் கேரியரில் சிறந்த ஒன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் இதற்கு முன்பாக சதங்கள் அடித்திருக்கிறார்; அவையெல்லாம் சிறந்தது இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் இந்த இன்னிங்ஸ் வேற மாதிரி. மற்ற வீரர்கள் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறும் போது, அவர் தனியாக நின்று 84 ரன்கள் எடுத்து அணியை கௌரவமான ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். அதில் அணிக்காக பங்களித்த ஒரு திருப்தி இருக்கிறது. அது கேப்டனின் இன்னிங்ஸ் ஆடிய பெருமை” என்று கூறி இருக்கிறார்.






