160 ரன் இந்தியா ஆடாம தந்தாலும் எடுத்துக்குவோம்.. ஈஸியா ஜெயிச்சிருப்போம் – மோனன்க் படேல் வருத்தம்

0
6
Monank

நேற்று இந்திய அணிக்கு எதிராக தாங்கள் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டதால் வென்று இருக்க முடியும் என்று அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 77 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. அங்கிருந்து சூரியகுமார் சிறப்பாக விளையாட இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. மேலும் அடுத்து விளையாடிய அமெரிக்கா அணி பவர் பிளேவிலேயே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

160 எங்களுக்கு நல்ல ஸ்கோர்தான்

இந்த போட்டி குறித்து அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் கூறும் பொழுது “எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று சிறப்பாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினார்கள். பவர் பிளேவில் இந்திய பேட்ஸ்மேன் எங்களிடம் அதிரடியாக ஆட முடியவில்லை. நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக நெருக்கடி கொடுத்தோம்”

“நாங்கள் அவர்களை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் சில கேஸ் வாய்ப்புகளை கொடுத்தது பின்னடைவை உருவாக்கி விட்டது. இருந்தாலும் 160 ரன் என்பது அடிக்கக் கூடியதுதான். இந்தியா ஆடாமலே 160 ரன் கொடுத்திருந்தால் கூட நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம்”

- Advertisement -

தோல்விக்கு காரணம் இதுதான்

“நாங்கள் முதல் மூன்று விக்கெட்டுகளை பவர் பிளேவில் மிக வேகமாக இழந்துவிட்டோம். எனவே பவர் பிளேவில் எங்களால் ரன்கள் கொண்டுவர முடியவில்லை. மூன்று விக்கெட் வேகமாக விழுந்ததால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இன்டெண்ட் காட்டி விளையாட முடியவில்லை”

இதையும் படிங்க : பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி இருக்கணும்.. ஒரே ஒரு கேட்ச் பிடிக்காம அவமானம் ஆயிடுச்சு – நெதர்லாந்து வீரர் பேட்டி

“அதே சமயத்தில் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் நிறைய வகைகளில் எங்களுக்கு உதவி செய்யும். எங்களின் சில பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறார்கள். மேலும் இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக பெரிய கூட்டத்திற்கு முன்பாக நாங்கள் செயல்பட்ட விதத்தில் சில பாசிட்டிவான விஷயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -