நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணியில் முக்கியமான ஒரு வீரரை தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டதாக வீரர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து கருண் நாயருக்கு மறு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அர்ஸ்தீப் சிங் இந்திய டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தேர்வு செய்யப்படாத மூன்று வீரர்கள்
இந்த இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த போதிலும் இந்திய அணியில் இவரை கண்டு கொள்ளவில்லை. இதற்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வந்த சர்பராஸ் கானை நீக்கி இருக்கிறார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே இவர் இந்திய டெஸ்ட் அணியின் ஒரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இவரை இந்திய ஏ அணியிலும் சேர்க்கவில்லை.
இவரை சேர்க்காதது தவறு
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” நடப்பு ஐபிஎல் தொடரில் நிச்சயமாக ரிஷப் பண்ட் கேப்டனாக பாராட்டை பெற மாட்டார். இதன் காரணமாகத்தான் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை. அதே சமயத்தில் பேட்ஸ்மேன் ஆக கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறந்த சீசனை கொண்டு இருக்கிறார். அவரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது? அவர் மூன்று வடிவத்திலும் விளையாடும் திறமையை கொண்டிருக்கிறார்”
இதையும் படிங்க : யுவராஜ் சிங் இதை செய்யலனா.. இன்னைக்கு கில் கேப்டன் ஆயிருக்க முடியாது.. விஷயம் தெரியுமா? யோக்ராஜ் சிங் பேட்டி
“அவர் நல்ல பார்மில் இருக்கும் பொழுது அவரை கூட்டிச் செல்வது நல்லது. ஏனென்றால் அவர் நல்ல முறையில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அவர் டெஸ்ட் அணியிலும் இதே அதிரடி அணுகுமுறையை கடைப்பிடித்தால், அது அணிக்கு நன்மையை உண்டாக்கும். ஏனென்றால் உங்களிடம் இது போன்ற இரண்டு மூன்று வீரர்கள் இருந்தால் அது எதிரணிக்கு பயத்தை உருவாக்கும். இங்கிலாந்து ஓவருக்கு ஆறு ஏழு ரன்கள் எடுக்கும் என்றால், நாம் ஒரு ஓவருக்கு நான்கு அல்லது ஐந்து ரன்கள் எடுத்தால் கூட அவர்களை அழுத்தத்தில் வைக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.






