பஞ்சாப்ப ஜெயிக்க விட்டது ஹர்திக் பாண்டியா தான்.. இப்படி எல்லாமா தப்பு பண்ணுவாங்க – சேவாக் விமர்சனம்

0
124
Hardik

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்ததாக வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து, இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் நேரடியாக விளையாட முடியும் என்கின்ற சூழ்நிலை இரண்டு அணிகளுக்குமே இருந்தது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக மாறியது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவின் தவறு

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 184 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தீபக் சகர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவர் மெய்டனாக அமைந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு வழக்கம்போல் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார்.

இந்த நிலையில் அணியில் தேவையான அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் கூட தீபக் சகருக்கு தொடர்ந்து இரண்டு ஓவர்களை ஹர்திக் பாண்டியா கொடுத்தார். அதில் ஒரு ஓவருக்கு விக்கெட் கீப்பரை முன்னே கொண்டு வந்து நிறுத்தி வைத்தார். இந்த இரண்டு ஓவரிலும் தீபக் சகர் 28 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நேரத்தில் பவர் பிளேவில் பும்ரா ஒரு ஓவர் வீசி ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். அவரை ஆறாவது ஓவர் வீச வைக்காமல் அந்த ஓவரை தீபக் சகர் இடம் ஹர்திக் பாண்டியா கொடுத்தது போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.

- Advertisement -

கதையே வேறாக இருந்திருக்கும்

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார். நேற்று பும்ராவிடம் ஹர்திக் பாண்டியா சென்று இருந்தால் போட்டியின் முடிவே மாறி இருக்கும் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : அகர்கர் அசத்திட்டீங்க.. ஸ்ரேயாஸை டெஸ்ட்க்கு செலக்ட் பண்ணாதது ரொம்ப சரி.. காரணம் இதுதான் – மான்டி பனேசர் கருத்து

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு தீபக் சகருக்கு மூன்றாவது ஓவரை தொடர்ந்து கொடுத்ததுதான். ஏற்கனவே அவர் அந்த நேரத்தில் தொடையில் காயம் அடைந்திருந்தார். மேலும் அதற்கடுத்து வந்து வீசிய இரண்டு ஓவரில் அவர் 28 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பும்ரா ஒரு விக்கெட் கைப்பற்றி ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார். இந்த நிலையில் மேற்கொண்டு பந்தை பும்ரா கையில் கொடுத்திருந்தால் போட்டி வேறு விதமாக அமைந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -