இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் வார்விக்ஷயர் அணிக்காக விளையாடி ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 130 வருட வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் வார்விக்ஷயர் அணி இன்னிங்ஸ் மற்றும் 257 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் மானவ் சுதர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன்மூலம் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் ஒரு ரன் கூட கொடுக்காமல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் 1895-ம் ஆண்டு இங்கிலாந்தின் டாம் ஹேவர்ட் என்ற பவுலர் மட்டுமே லெஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி இந்த சாதனையை செய்து இருந்தார்.






