ஐபிஎல் 2025

ரஜத் பட்டிதார் டீம்ல ஒருத்தர் கூட அறிவை யூஸ் பண்ணல.. தம்பி இத செய்ய என்ன பிரச்சனை? – சேவாக் விமர்சனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களில் டிம் டேவிட் தவிர ஒருவர் கூட தங்களுடைய காமன் சென்சை பயன்படுத்தி விளையாடவில்லை என வீரேந்தர் சேவாக் அதிரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆர்சிபி அணி அதில் நான்கு போட்டிகளை வெளியில் விளையாடி மொத்தமாக வென்றது. அதே சமயத்தில் தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது.

வித்தியாசமான ஆர்சிபி அணி

ஐபிஎல் வரலாற்றில் வழக்கமாக ஆர்சிபி அணி பெரும்பான்மையாக பந்துவீச்சில்தான் அதிகமாக ஏமாற்றங்களை கொடுக்கும். அந்த அணிக்கு வரும் பந்துவீச்சாளர்கள் ரண்களை வாரிக் கொடுப்பார்கள். இதனால் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் குவித்தாலும் வெற்றிக்கு போதாத நிலை உருவாகி விடும். ஆனால் இந்த முறை ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருக்க பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகிறார்கள்.

நேற்றைய போட்டியில் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் களுக்கு கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்ததால் விளையாட சிரமமாக இருந்தது. ஆனால் சுதாரித்து 110 அல்லது 120 ரன்கள் என டார்கெட் வைத்து விளையாட முடிவு செய்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியை ஆர்சிபி அணியால் வெல்ல முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் பொறுப்பில்லாமல் விளையாடி 95 ரன்கள் மட்டுமே ஒன்பது விக்கெட் இழப்புக்கு எடுத்தார்கள். இதை பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

யாருக்குமே காமன் சென்ஸ் இல்லை

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “ஆர்சிபி மோசமாக விளையாடியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் அஜாக்கிரதையாக ஷாரட் விளையாடி ஆட்டம் இழந்தார்கள். ஒரு பேட்டர் கூட நல்ல பந்தில் ஆட்டம் இழக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு பேட்டராவது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் கையில் விக்கெட் இருந்திருந்தால் 110 அல்லது 120 ரன்கள் எடுத்திருக்க முடியும். இது அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் சண்டையிடுவதற்கு வாய்ப்பு அளித்திருக்கும்”

இதையும் படிங்க : சின்னசாமி செவக்கணுமா?.. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி படைத்த மோசமான சாதனை.. ரசிகர்கள் வேதனை

“விக்கெட்டை எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நேற்று ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கொடுத்தார்கள். படிதார் இதற்கு யோசித்து ஒரு தீர்வை கொண்டு வர வேண்டும். அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறுகிறார்கள். உங்கள் சொந்த மைதானத்தில் தொடர்ந்து தோல்விகள் வரும்பொழுது அதை யார் சரி செய்வது?” என்று விமர்சித்துக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -
Published by