தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சித் தளம் மற்றும் பேட்டிங் கோச் நியமனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சதாகோபன் ரமேஷ் விமர்சித்து பேசி இருக்கிறார்.
வரவிருக்கும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை அணி தனது கோச்சிங் ஸ்டாஃப் அமைப்பில் செய்துள்ள மாற்றங்கள் மற்றும் போதிய பேட்டிங் கோச் நியமிக்காதது பற்றி பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் சதாகோபன் ரமேஷ் பேசும்போது “ஒரு சர்ப்ரைஸாக இருப்பதைத் தாண்டி, இது ஸ்ட்ராட்டஜிக்கலி தவறு என்றும் நான் உணர்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே தடுமாறியது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களின் நம்பர்ஸை பிரித்துப் பார்த்தால், குறைந்த ஆவரேஜ் ரன்களை விட்டுக் கொடுத்ததில் சிஎஸ்கே உண்மையில் டாப் டூ இடங்களில் சிறப்பாக உள்ளது”
“இருப்பினும், பேட்டிங்கைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு சீசன்களில் ஆவரேஜ் டீம் டோட்டல்களில் (178) பாட்டம் டூ இடங்களில் உள்ளது. எனவே, சிஎஸ்கேவின் மெயின் இஸ்யூ பேட்டிங் என்பது தெளிவாகிறது. ஆனாலும், ஜாகீர் கான், மோகித் சர்மா, கரேத் பாட்டி மற்றும் பவுலிங் ஆல் ரவுண்டரான அல்பி மோர்கல் ஆகியோருடன் கோச்சிங் செட்டப்பில் பவுலிங் ஃப்ரண்ட்டை அவர்கள் முழுமையாக லோட் செய்துள்ளனர்”
“என்னிடம் யாராவது சிஎஸ்கேவின் பேட்டிங் கோச் யார் என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. அணியில் மென்டாராக இருக்கும் எம்எஸ் தோனி தான் பேட்டிங்கை கவனித்துக் கொள்வார் என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூட ஒரு முன்னாள் பேட்டர் தான். இருப்பினும், அவர்களுக்கு ஒரு பிரத்யேக பேட்டிங் கோச் தேவைப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். பவுலிங் ஃப்ரண்ட்டில் பல கோச்ச்கள் இருக்கும்போது, பேட்டிங்கிற்கு ஒருவரைக் கூட நியமிக்காதது எனக்குப் புரியவில்லை. சிஎஸ்கேவின் இந்த முடிவு எனக்கு மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.