நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களது சொந்த மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்திருக்கிறது. அடிக்கு மேல் அடி வாங்கியதால் ஆர்சிபி ரசிகர்கள் வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த போட்டி மழையின் காரணமாக 14 ஓவர் கொண்ட போட்டியாக குறைத்து நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளத்தில் ஸ்பான்சி பவுன்ஸ் இருந்த காரணத்தினால் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
ஆடுகளத்தை தெரிந்தும் கோட்டை விட்ட ஆர்சிபி
மழை பெய்திருந்த காரணத்தினால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்த போதும் கூட ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அனைவருமே தொடர்ந்து ரன்கள் எடுக்க மட்டுமே முயற்சி செய்து விக்கெட்டுகளை கொடுத்து வந்தார்கள். இறுதியில் டிம் டேவிட் மட்டும் 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி குறிப்பிட்ட 14 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்த போதும் கூட, நெகேல் வதேராவின் அதிரடியின் காரணமாக 12.1 ஓவரில் இலக்கை எட்டி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதே சமயத்தில் ஏழாவது போட்டியில் மூன்றாவது தோல்வியை தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி பதிவு செய்தது.
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை
18 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக போட்டிகளை தோற்ற அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இருந்து வந்தது. அந்த அணி அவர்களது சொந்த மைதானமான அருண் ஜெய்ட்லி மைதானத்தில் மட்டும் 45 தோல்விகளை சந்தித்து முதல் இடத்தில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததின் மூலம், அவர்களது சொந்த மைதானத்தில் 46வது தோல்வியை பதிவு செய்தது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் அதிக தோல்வியை அடைந்த அணியாக ஆர்சிபி மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது.
இதையும் படிங்க : எதிரணி வீரரின் திட்டத்தை பார்த்து.. எங்க பேட்ஸ்மேன்கள் கத்துக்கணும்.. அப்பதான் சொந்த மண்ணில் ஜெயிக்க முடியும் – ஆர்சிபி பவுலர்
ஒரு மைதானத்தில் அதிக தோல்விகள் :
46 – RCB சின்னசாமி, பெங்களூரு
45- டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டி.சி
38- கொல்கத்தா ஈடன் கார்டனில் கே.கே.ஆர்
34 – மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை
30 – பிசிஏ ஸ்டேடியம், மொஹாலியில் பிபிகேஎஸ்
24- சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே
23 – ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் எஸ்.ஆர்.எச்






