தம்பி விராட் கோலி.. நீ என்ஜாய் பண்ணுப்பா.. அப்படியே இஷான், கில் ரெண்டு பேருக்கும் சொல்லி குடுப்பா – ஜாகீர் கான் அறிவுரை!

0
1009

விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் கரியரின் இந்த பகுதியை என்ஜாய் செய்ய வேண்டும். அதேநேரம் இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் ஜாகீர் கான்.

சர்வதேச கிரிக்கெட் கரியரில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி தன்னுடைய 76 ஆவது சதத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அடித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

இது மட்டுமல்லாது சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளையும் விராட் கோலி நெருங்கி வருகிறார். சிலவற்றை நெருங்கக் கூடிய தகுதி படைத்தவராகவும் இருக்கிறார். அடுத்த 2-3 ஆண்டுகளில் அதையும் செய்துவிடுவார் என்று கருதப்படுகிறது.

இந்திய அணிக்கு சில ஆண்டுகள் கேப்டன் ஆகவும் திகழ்ந்திருக்கிறார். அதிலும் விராட் கோலி சாதித்தவை ஏராளம். கடந்த சில ஆண்டுகள் சதமடிக்கவில்லை என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஆகையால் தன்னுடைய கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சக வீரராக தற்போது விளையாடி வருகிறார்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இழந்த ஃபார்மை 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரிலிருந்து மீட்டு சதம் மற்றும் அரைசதங்களாக வரிசையாக அடித்து வரும் விராட் கோலி, தன்னுடைய கிரிக்கெட் கரியரின் இந்த பகுதியை என்ஜாய் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ஜாகீர் கான்.

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்திருக்கிறார். நடுவில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்திருந்தாலும் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார். அதை அவர் என்ஜாய் செய்து வருகிறார். தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். இந்திய அணிக்கு அவர் செய்யாதது என்னவென்று மட்டுமே கணக்கிட முடியும். செய்தவை அத்தனை இருக்கின்றன.

அவருடைய கிரிக்கெட் கரியர் முடிவடைவதற்குள் அணியில் இருக்கும் இளம் வீரர்களான இஷான் கிஷன், கில் போன்றவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துவிட்டு செல்ல வேண்டும். அதை அவர் செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வர வேண்டும் என்று விரும்புகிறேன்.” என கருத்து தெரிவித்தார்.