பேய் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி.. அஸ்வின், ஜடேஜா, சஹல் பந்துவீச்சை பொளந்துகட்டிய வீடியோ!!

0
445

ஆசிய கோப்பை பயிற்சியின் போது இந்திய வீரர்களின் பவுலிங்கை வெளுத்து வாங்கிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் 15 வது சீசன் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. துவக்க போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன. அதற்கு அடுத்ததாக கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் கடைசியாக மோதின. அப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. அதற்கு இந்திய அணி இம்முறை பழி தீர்க்குமா? என தொடர்ந்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

கடைசியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் தொடராக நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பைத் தொடர், டி20 தொடராக நடத்தப்பட்டது. அதிலும் இந்திய அணியை வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இந்திய அணி ஏழு முறை கோப்பையை வென்றிருக்கிறது.

கடந்த முறை இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி இருந்தார். இம்முறை ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடுகிறார். ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் முதல் மிகப்பெரிய தொடர் இதுவாகும் என்பதால், இதன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜிம்பாப்வே தொடரை முடித்துவிட்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி துபாய் சென்ற இந்திய வீரர்கள் நள்ளிரவிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி சரிவை சந்தித்து வருகிறார். அவரின் இயல்பான ஆட்டத்தில் அவர் இல்லை. சிறு ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் திரும்பி இருக்கிறார். பழைய பார்மை நள்ளிரவிலும் துபாய் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் பந்தை வெறித்தனமாக அடித்து பயிற்சி செய்து வந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

வலைபயிற்சியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் சகல் ஆகியோரின் பந்துவீச்சை அபாரமாக விளையாடி தனது பழைய பாமை மீட்டு வருகிறார்.

வீடியோ: