இவரது விக்கெட்தான் எனக்கு உணர்ச்சிகரமான தருணம்.. ஆனால் அவரே என்னை பாராட்டியும் இருக்கிறார்.. நேத்ரவல்கர் பேட்டி

0
184

நான் வீழ்த்திய ஒரு விக்கெட் தான் தனக்கு உணர்ச்சிகரமான தருணமாக இருந்ததாகவும், அவரே தன்னை பாராட்டி இருந்ததாகவும் நேத்ரவல்கர் பேட்டியளித்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கிடையான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அமெரிக்க அணி வீரர் நேத்திரவல்கரின் பந்து வீச்சு அனைவரது பாராட்டைப் பெற்றது.

- Advertisement -

இந்திய அண்டர் 19 வீரரான சவுரப் நேத்ரவல்கர் தற்போது அமெரிக்காவில் சர்வதேச அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்க அணி நடத்துவதால் இந்த முறை உலக கோப்பைக்கு நேரடியாக அமெரிக்கா தகுதி பெற்றது. இருப்பினும் ஒரு தேர்ந்த அணி போலவே அமெரிக்க அணி உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டு வருகிறது.

தனது முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்திய அமெரிக்கா, அடுத்த போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அமெரிக்க அணியில் ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி தோல்வியை தழுவினாலும், அதில் பந்து வீசிய நேத்ரவல்கரின் பந்துவீச்சு கவனத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

- Advertisement -

நான்கு ஓவர்கள் பந்து வீசிய நேத்திரவல்கர் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் விராட் கோலியின் விக்கட்டை வீழ்த்தியது தனது உணர்ச்சிகரமான தருணம் என்றும், விராட் கோலி தன்னை பாராட்டி இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
“எனது கிரிக்கெட் வாழ்க்கை தற்போது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.இது அனைத்துமே வேகமாக நடைபெற்று வருவதால், அதை தற்போது ஜீரணிக்கும் பணியில் இருக்கிறேன். நான் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகள் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நான் விராட் கோலிக்கு ஆப் ஸ்டம்பை நோக்கி பந்து வீச முயற்சி தேன். அது எனக்கு நன்றாக வேலையும் செய்தது. எனது அண்டர் 15, அண்டர் 17 காலகட்டத்தில் இருந்து சூரியகுமார் யாதவை எனக்கு தெரியும்.

இதையும் படிங்க:ரசிகர்கள் ஆதரவை இழந்த பாகிஸ்தான்.. மூன்று முக்கிய வீரர்களின் சொதப்பலே தோல்விக்கு காரணம்.. கைப் பேட்டி

நானும் சூரியகுமார் யாதவும் நல்ல நண்பர்கள். நானும், அவரும் டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். விராட் கோலிக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லை. ஆனால் விராட் கோலி சந்தித்தபோது அவரே என்னை வாழ்த்தினார்” என்று நேத்திர பல்கர் கூறி இருக்கிறார்.

- Advertisement -