பாபர் ஆஸம் பற்றி விராட்கோலி உருக்கமான பேச்சு!

0
344
Virat kohli

இன்றைய தேதிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றால் அது இருவர்தான். ஒருவர் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி. இன்னொருவர் பாகிஸ்தானின் ரன் மெஷின் பாபர் ஆசம். இதில் இந்தப் பத்தாண்டுகளில் தனக்கு எந்தப் போட்டியும் இல்லாமல் தனி ஆவர்த்தனம் செய்தவர் விராட் கோலி. பாபர் ஆசம் இந்த இடத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தான் வந்திருக்கிறார்!

கடந்த மூன்று வருடங்களில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் சரியாக இல்லை. ஆனாலும் அவரது புள்ளிவிவரங்களில் பெரிய சரிவுகள் ஏதும் இல்லை. அந்த அளவிற்கு அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச் சிறப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மெஷின் போல ஓயாமல் ரன்களை குவித்து வந்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது எப்படியாவது இழந்த பார்மை அவர் மீட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே உடனான கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர்ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.

இன்று மனம் திறந்து அவர் பல விஷயங்களை பேசி இருக்கிறார். தான் மனநிலை பாதிப்படைந்து பலவீனமாக உள்ளதாகவும் இதை வெளியில் சொல்வதில் தனக்கு எந்த வெட்கமும் இல்லை எனவும் தெரிவித்து இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மாதம் முழுமையாக பேட்டை தொடாமல் இருந்தது இப்பொழுது தான் என்றும் கூறியிருந்தார். அவர் எந்த அளவிற்கு பேட்டிங் பார்ம் சரிவால் மனம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தநிலையில் அவரோடு ஒப்பிட்டு பேசப்படும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அந்த மாதத்தில்” இதுவும் கடந்து போகும் வலிமையாக இருங்கள் கோலி” என்று அவருக்கு ஆதரவாக ட்விட் செய்திருந்தார். அதற்கு விராட் கோலியும் நன்றி தெரிவித்து நீங்கள் இன்னும் மென்மேலும் வளரவீர்கள் என்று வாழ்த்தி இருந்தார்.

- Advertisement -

பல விஷயங்களை மனம் திறந்து பேசி வரும் விராட் கோலி தற்போது தனக்கும் பாபர் ஆஸமுக்கும் உள்ள பழக்கம் பற்றியும் அது எப்பொழுது ஆரம்பித்தது என்பதையும், நட்பு தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது ” 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது பாபர் ஆசமுடன் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு அமைந்தது. நாங்கள் உட்கார்ந்து நிறைய பேசினோம். அவருக்கு நிறைய மரியாதை இருந்தது. தற்போது அவர் உலக கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் விளையாடிய பிறகும் அது மாறவில்லை. அவர் டவுன் டு எர்த் கேரக்டர். அவர் ஒரு உயிராக இன்னும் நீண்ட தூரம் நல்லமுறையில் செல்லவேண்டும். அவர் செல்வார். தற்போது 3 பார்மட் கிரிக்கெட்டிலும் அவர் சிறந்த வீரர். அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்து ரசித்தேன்” என்று கூறியிருக்கிறார்!

ஆசிய கோப்பையில் நாளை ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் களத்தில் இவர்கள் இருவரது செயல்பாடுகளையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் என்பதில் சந்தேகமே கிடையாது!