நான்தான் கிங்.. விராட் கோலி யாரும் செய்யாத சாதனை.. உலககோப்பை தொடரில் மெகா ரெக்கார்டு

0
144
Virat

இன்று டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் அரை இறுதிக்கும், பங்களாதேஷ் வென்றாள் அரையிறுதி வாய்ப்பிலும் இருக்கும். இந்த போட்டியில் விராட் கோலி 30 ரன்கள் தாண்டிய பொழுது, உலகக்கோப்பை தொடர்களில் மாபெரும் சாதனையை படைத்தார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. பங்களாதேஷ் அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வந்தார்கள். ரோகித் சர்மா முதல் ஓவரில் பவுண்டரி ஒன்று அடிக்க ரன்கள் கிடைத்தது. இதற்கு அடுத்து இருவருமே வேகமாக விளையாடி ரன்கள் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் போட்டியில் வீசிய மூன்றாவது ஓவரில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு 11 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விராட் கோலி 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும் இந்த ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒட்டுமொத்த ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பை தொடர்களில் விராட் கோலி 3 ஆயிரம் ரன்கள் கடந்தார். மேலும் உலகக் கோப்பைத் தொடர்களில் 3 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரராகவும் விராட் கோலி இருக்கிறார்.

ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் :

- Advertisement -

3001* விராட் கோலி
2637 ரோஹித் ஷர்மா
2502 டேவிட் வார்னர்
2278 சச்சின் டெண்டுல்கர்
2193 குமார் சங்ககாரா

இதையும் படிங்க : ஸாரி கோலி ரோஹித் அந்த சிறந்த லிஸ்ட்ல கிடையாது.. இந்த திறமை இவங்ககிட்ட இல்ல – ஆகாஷ் சோப்ரா கருத்து

இன்று விராட் கோலி சிறப்பாக ஆரம்பித்த விதத்திற்கு அரை சதம் கடந்து விளையாடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், நேராக அடிக்க வேண்டிய பந்தை சுத்தி ஆட்டம் இழந்திருக்கிறார். மேலும் விராட் கோலிக்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் சந்தித்த இரண்டாவது பந்தில் வெளியேறிவிட்டார்.