ஸாரி கோலி ரோஹித் அந்த சிறந்த லிஸ்ட்ல கிடையாது.. இந்த திறமை இவங்ககிட்ட இல்ல – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
42
Aakash

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணி இன்று சூப்பர் 8 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஒரு சிறந்த பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு தான் இடம் தர மாட்டேன் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியாக கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக விராட் கோலி உயர்த்தப்பட்டு இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக 741 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றியதின் விளைவாக விராட் கோலி பேட்டிங் வரிசையில் வேலை வந்திருக்கிறார். ஆனால் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான துவக்கத்தை மட்டும் அல்லாமல் சராசரியான துவக்கத்தை இதுவரையில் தரவில்லை.

- Advertisement -

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “டைனமிக் ஓபனர்ஸ் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை துரதிஷ்டவசமாக வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்பொழுது வரை சீராக இல்லை. மேலும் அவர்கள் திறமை கொண்டவர்களாக இருந்தாலும் கூட அதிரடியாக ஆட கூடியவர்களாக இல்லை. மேலும் அந்தத் திறமையை இப்போது அவர்களிடம் பார்க்க முடிவதில்லை.

எனவே நேர்மையான முறையில் நான் அவர்களுக்கு இந்த பட்டியலில் இடம் தர மாட்டேன். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், பில் சால்ட், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இந்த இரண்டு ஜோடிகள்தான் இருப்பார்கள். மேலும் இந்த இரண்டு ஜோடியில் நான் பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருடன் செல்கிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பில் சால்ட் அபாரமான முறையில் விளையாடினார். இன்னொரு பக்கம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சென்றார். இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மேலும் இருவருமே நன்றாகவும் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. நான் முன்னவே சொன்னேன்.. இவர்தான் உலகின் சிறந்த பவுலர்.. சூரியகுமார் யாதவ் பேட்டி

சூப்பர் 8 சுற்றில் முதலில் இந்திய அணி ஆஸ்திரேலியக்கு எதிராக விளையாடும் பொழுது டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஜோடியை சந்திக்கும். இதற்கு அடுத்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பும் இந்திய அணிக்கு இருக்கிறது. எப்படி இருந்தாலும் எனக்கு இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.