தோனி எங்களுக்கு நிறைய பண்ணிருக்கார்.. அப்படி பண்ணது ரொம்ப சந்தோஷம்.. ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

0
2409

இந்திய கிரிக்கெட் அணி ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தோனிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி வெற்றிகரமாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் தடுமாறினாலும் அதன் பின்னர் சுதாரித்து எழுந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று தற்போது சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை பாராட்டும் விதமாக மகேந்திர சிங் தோனி தனது சமூக வலைதளத்தில் உலகச் சாம்பியன்கள் 2024. என் இதயத்துடிப்பு அதிகரித்த தருணம் இது. தன்னம்பிக்கையோடு இருந்து இந்திய அணி என்ன செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறது. தற்போது இந்தியா திரும்பி இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வந்த இந்திய வீரர்களுக்கும் பெரிய நன்றி. எனது பிறந்தநாளுக்கு இது ஒரு விலைமதிப்பில்லாத பரிசு” என்று கூறியிருந்தார்.

தோனியின் இந்த பதிவு குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “தோனி ஒரு அற்புதமான வீரர். அவர் இந்திய நாட்டிற்காகவும், எங்களுக்காகவும் நிறைய செய்திருக்கிறார். அவர் எங்களை பாராட்டியது மகிழ்ச்சிகரமான உணர்வு எனது உள்ளுணர்வின்படி நான் எது சரி என்று நினைக்கிறானோ, நான் கேப்டனாக இருக்கும்போது இயல்பாக அதை செய்ய முயற்சிக்கிறேன். நான் உள்ளே என்ன நினைக்கிறேனோ அதையேதான் செய்ய முயல்கிறேன்.

- Advertisement -

கடந்த காலத்தை பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நான் அதிகம் யோசிக்க விரும்பவில்லை. நான் டி20ல் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் ஓய்வு பெற இதை விட சிறந்த தருணம் வேறு எதுவும் இருந்து விட முடியாது. அதனால் நான் ஓய்வு பெறுகிறேன் ” என்று கூறியிருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க:வீரரா எனக்கு அதிர்ஷ்டம் இல்ல.. அடுத்த 5 வருஷம் இந்தியா நிறைய கோப்பைகளை ஜெயிக்கும்.. டிராவிட் உணர்ச்சி வசம்

2013ஆம் ஆண்டு இந்திய அணி கடைசியாக ஐசிசி தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் 11 வருடங்களாகியும் எந்த ஒரு கோப்பையையும் கைப்பற்றாத நிலையில், தற்போது டி20 உலக கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தற்போது இந்திய அணியினர் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.