கடந்த மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே, விராட் கோலி கூடிய விரைவில் தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக கூறியிருந்தார். உலக கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் தான் இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக நீடிப்பேன் என்றும் அந்த அறிக்கையில் வெளிப்படையாக கூறி இருந்தார்.
இந்நிலையில் பிசிசிஐ நேற்றைய முன்தினம் இந்திய அணியின் புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்தது. இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மா கடந்த மாதம் தனது பொறுப்பை ஏற்று, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு தொடரிலும் விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் தற்பொழுது எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென இந்திய அணியின் ஒருநாள் கேப்டனான விராட் கோலியை நீக்கி, புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமித்தது பல இந்திய ரசிகர்களை கேள்வி எழுப்ப செய்துள்ளது.
கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா குற்றச்சாட்டு
விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். விராட் கோலிக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தான் முயற்சிக்க முயன்ற பொழுது, அவரது மொபைல் தற்பொழுது வரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக ஒருநாள் கேப்டனாக விராட் கோலி பல போட்டிகளில் தன்னுடைய முழு பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அப்படி இருக்கையில் திடீரென இந்த முடிவை பிசிசிஐ எடுத்ததற்கு என்ன காரணம் என்று ராஜ்குமார் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக கூறிய சமயத்தில், பிசிசிஐ அவரிடம் நீங்கள் விலக வேண்டாம் என்று கூறியது போன்ற தற்பொழுது செய்திகள் உலா வருகிறது.ஆனால் அப்படிப்பட்ட ஒரு அதிகாரபூர்வமான செய்தி தன் நினைவில் இல்லை என்றும் இதுபோல பல அதிகாரப்பூர்வ மில்லாத பல செய்திகள் சமூக வளைதளத்தில் புறப்பட்டு வருவதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ ஒளிவு மறைவின்றி இது சம்பந்தமாக முறையான அறிக்கை ஒன்றை விரைந்து வெளியிட வேண்டும் என்றும் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா இறுதியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.