ஆசியா கப் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி மாஸ்டர் பிளான்.. பேட்டிங் பயிற்சியில் அசத்தல் மாற்றம்!

0
1488
Virat

பாகிஸ்தானில் இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் இலங்கையிலும் சேர்த்து ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது!

ஆசியக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தற்போது கர்நாடக மாநிலம் ஆலூரில் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்று வருகிறது!

- Advertisement -

இன்றைய பயிற்சி முகாமில் மிக முக்கியமாக காலை முதல் பயிற்சி அமர்வில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக கே எல் ராகுல் வந்து ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். மேலும் ஒரு மணி நேரம் கொஞ்சம் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் செய்தார்.

இன்று காலை முதல் பயிற்சி அமர்வில் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா அதற்குப் பிறகு பேட்டிங் பயிற்சிக்கு வரவில்லை. அவர் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து, ஆடுகளத்தில் எந்தெந்த இடங்களில் பந்தை தரையிறக்க வேண்டும் என்கின்ற ஆலோசனையில் நீண்ட நேரம் ஈடுபட்டு இருந்தார்.

இன்னொரு புறத்தில் ஸ்ரேயாஸ் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிகச் சிறப்பாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் இதற்கு முந்தைய நாள் பயிற்சி அமர்வில் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று விராட் கோலி ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து பேட்டிங் பயிற்சிக்கு வந்தார். இன்றைய அவருடைய பேட்டிங் பயிற்சி வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக இருந்தது.

வழக்கமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது என்றால், இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகமாக வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் என்று வைத்து பயிற்சி செய்வது வழக்கம்.

ஆனால் இந்த முறை விராட் கோலி பாகிஸ்தானின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு குறி வைத்து இருக்கிறார். இதன் காரணமாக அவர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் ஹிருத்திக் சோக்கின் ஆகிய இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடியதோடு, பந்துவீச்சை தாக்கி விளையாடினார்.

மேலும் குறிப்பிட்ட நேரம் உயரமான இடது கை வேகப்பந்துவீச்சாளர் அங்கித் சவுத்ரியை எதிர்கொண்டும் விளையாடினார். விராட் கோலி மத்திம ஓவர்களில் ரன் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தானின் பவுலிங் யூனிட்டில் பலவீனமாக இருக்கும் சுழற் பந்துவீச்சு பந்து வீச்சாளர்களை குறி வைத்து இருக்கிறார் என்று தெரிகிறது.