ரோகித் தோனி பேட்களை விட.. அதிக விலைக்கு ஏலம் போன கோலி ஜெர்சி.. கேஎல் ராகுலின் உன்னத செயல்

0
130
Virat

ஒரு உன்னதமான காரியத்திற்காக சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் மிக அதிகபட்சமாக விராட் கோலியின் ஜெர்ஸி 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் இருக்கிறது.

இந்த ஏலத்தில் தற்போது விளையாடக்கூடிய வீரர்கள் மற்றும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட மகேந்திர சிங் தோனியும் தன்னுடைய சேகரிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் உபகரணத்தை ஏலத்திற்கு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேஎல்.ராகுல் – அதியா ஷெட்டி

கேஎல் ராகுல் மற்றும் அவருடைய மனைவி அதியா ஷெட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் தரமான கல்விக்காக பிரபல கிரிக்கெட் வீரர்களின் பொருட்களை வாங்கி ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை அந்த குழந்தைகளுக்கு விப்லா அறக்கட்டளை மூலமாக கொடுக்கும் ஏன் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்த ஏலத்தில் மிக அதிகபட்சமாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் ஜெர்சி 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேலும் இதே விராட் கோலியின் பேட்டிங் கிளவுஸ் 28 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மா – மகேந்திர சிங் தோனி

மேலும் இந்த ஏலத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட் 24 லட்ச ரூபாய்க்கும், மகேந்திர சிங் தோனியின் பேட் 13 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது.மேலும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 11 லட்சம் ரூபாய்க்கும், இதேபோல் கேஎல்.ராகுலின் ஜெர்சி லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் விலை போனது.

மேலும் இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரும் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவியுடன் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மேலும் இதில் சர்வதேச வெளிநாட்டு வீரர்கள் நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக், ஜோஸ் பட்லர் போன்ற நட்சத்திரங்களும் பங்கெடுத்து உள்ளார்கள்.

இதையும் படிங்க : 204 ரன்.. இங்கிலாந்து அணியிடம் விடாமல் போராடும் இலங்கை.. வாகன் சொன்னது நடக்குமா?.. முதல் டெஸ்ட் நிலவரம்

இந்த ஏலத்திலிருந்து ஒட்டு மொத்தமாக 1.98 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு இருக்கிறது. இந்த பணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளின் தரமான கல்விக்காக விப்லா அறக்கட்டளைக்கு கொடுக்கப்படுகிறது. கேஎல்.ராகுல் மற்றும் அவருடைய மனைவி அதிக ஷெட்டி இருக்கிறது உன்னதமான முயற்சிக்கு சமூக வலைதளத்தில் பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிக்கிறது!

- Advertisement -