“தலைவா யு ஆர் கிரேட்” சூரியகுமாருக்கு தலைவணங்கிய விராட்கோலி – கியூட்டான வீடியோ!

0
117

26 பந்துகளில் 68 ரன்கள் அடித்த சூரியகுமார் யாதவை தலைவணங்கி வரவேற்ற விராட் கோலியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களம் கண்டனர்.

- Advertisement -

கேஎல் ராகுல் மிகவும் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அதிரடி காட்டிய ரோகித் சர்மா 21(13) ரன்கள் அடித்திருந்தபோது அவுட் ஆனார். அதன் பிறகு உள்ளே வந்த விராட் கோலி, கேஎல் ராகுலுடன் சேர்ந்து நிதானமாக விளையாடினார். கே எல் ராகுல் 36(39) ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் ஹாங்காங் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். சற்றும் நிறுத்தாமல் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய சூரியகுமார் 22 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் நான்கு சிக்ஸர்கள், பௌண்டரி என தெறிக்கவிட்டு இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

வெறும் 26 பந்துகள் மட்டுமே பிடித்திருந்த சூரியகுமார் யாதவ், 6 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 68 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் கடப்பதே கடினம் என்ற இருந்தபோது, இவரின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. சூரியகுமார் ஸ்ட்ரைக் ரேட் 261 ஆகும்.

போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பெவிலியன் நோக்கி நடந்து சென்றபோது, சூரியகுமார் யாதவை பார்த்து விராட் கோலி தலைவணங்கினார். மூத்த வீரர் விராட் கோலியின் இத்தகைய செயல் பாராட்டுதலை பெற்றிருக்கிறது. விராட் கோலி தலைவணங்கியபோது, வெட்கப்பட்டு சிரித்த சூரியகுமார் யாதவ், கோலியை கட்டி அணைத்துக் கொண்டார். இந்த ஒட்டுமொத்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

அதன் பிறகு பேட்டிங் செய்த ஹாங்காங் அணி அவ்வபோது விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஓவரில் மூத்த வீரர் ஹயத் மற்றும் கின்சித் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹயத் 41 ரன்கள், கின்சித் 30 ரன்கள் அடித்திருந்தனர். கீழ் வரிசையில் சீசன் அலி மற்றும் மெக்கன்சி இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 26 ரன்கள் மற்றும் 16 ரன்கள் முறையே அடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஹாங்காங் அணி 152 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியாக இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்றதால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது.