நான் நன்றாக விளையாடவில்லை என்றால் கிளம்ப வேண்டியதுதான் என்று தெரியும் – விராட் கோலி வெளிப்படையான பேச்சு!

0
566
Virat kohli

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஆர்சிபி அணியின் இணையதள பக்கத்துக்கு தற்சமயம் பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதில் விராட் கோலி பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். மகேந்திர சிங் தோனிக்கும் தனக்குமான நட்பு எப்படியானது என்கிற வரையில் அதில் நிறைய பேசியிருக்கிறார்!

மகேந்திர சிங் தோனிக்கு தான் ஒரு வலது கையாகவே எப்பொழுதும் செயல்பட்டதாகவும் அவரே தன்னை அடுத்த கேப்டனாக முடிவு செய்ததாகவும் கூறி இருக்கிறார். மேலும் தன்னை வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று மற்றவர்கள் கருதுகிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை நான் அணிக்குள் கொண்டு வந்த கலாச்சாரம்தான் முக்கியம் என்று முக்கியமான பல விஷயங்களை தொட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதில் தொடர்ச்சியாக 2011- 12 ஆம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்த போது ஏற்பட்ட சோதனையான நிலைமையை குறித்து மனம் திறந்து கூறியிருக்கிறார் …

இது பற்றி விராட் கோலி பேசும் பொழுது
” சோதனையான காலம் 2012 என்று கூறுவேன். ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் தோற்று தவறாகி போயிருந்தது. மூன்றாவது போட்டி பெர்த்தில் ஆடிக் கொண்டிருந்தோம். ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு சாதகமாகவும், பவுன்ஸ் கொண்டதாகவும் இருந்தது. அந்த ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்றால் நான்காவது போட்டியில் இருக்க மாட்டேன் என்று எனக்கு தெரியும். மேலும் நான் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பி விளையாடி என்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!

தொடர்ந்து பேசிய அவர் “பெர்த் போட்டிக்கு முன்பாக நான் ஒவ்வொரு முறை பயிற்சிக்காக பேருந்தில் ஏறும் பொழுதெல்லாம் நான் இசையை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கு நான் தகுதியானவன் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டு சதங்கள் எடுத்திருக்கிறேன் என்னால் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். நான் நன்றாக இருக்கிறேன் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். அந்த டெஸ்ட் போட்டியில் கடினமான சூழலில் முதல் இன்னிங்சில் 48 ரண்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்கள் எடுத்தேன். மேலும் அந்த டெஸ்ட் போட்டியில் எங்கள் அணிக்காக அதிக ரன் எடுத்தவன் நான்தான். நாம் நம்மை எப்பொழுதும் நம்ப வேண்டும். நமக்குள் இருப்பதை பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை பெரும்பாலும் நாம் முழுமையாக செய்வதில்லை” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -