விராட் கோலி உலகச் சாதனை; ஹர்திக் பாண்டியா அதிரடி தாண்டவம்!

0
4025
Viratkohli

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று அடிலைடு மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்தி வருகின்றன!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் மற்றும் மார்க் வுட் இருவரும் காயத்தால் இடம் பெறவில்லை. இவர்கள் இருவருக்கும் பதிலாக சால்ட் மற்றும் ஜோர்டான் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் ஐந்து பந்துக்கு ஐந்து ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்துகளுக்கு 27 ரண்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடரில் நான்காவது அரை சதத்தை அடித்து ஆட்டம் இழந்தார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு இது 200ஆவது அரைசதம் ஆகும். மேலும் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதற்கு அடுத்து கடைசி நேரத்தில் தனது பவர் ஹிட்டிங் திறமையால் ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார். மொத்தம் 33 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சித்தருடன் 63 ரன்கள் சேர்த்தார். கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டம் இழந்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 168 ரன்கள் சேர்த்தது!

- Advertisement -

விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து நல்ல முறையில் ரன் சேர்க்கும் ஆட்டங்கள் இந்திய அணிக்கு நல்லவித முடிவுகளையே இதுவரை தந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த மைதானத்தில் கடைசி 11 சர்வதேச போட்டிகளில் டாஸ் வென்ற அணி வென்றதும் இல்லை!