இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தவறவிட்ட விராட் கோலி அதற்கு அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். இந்த தொடரில் 58 ரன்கள் எடுக்கும் பொழுது மிகப்பெரிய ஒரு சாதனையை படைக்க இருக்கிறார்.
விராட் கோலி ஓய்வு பெறும் பொழுது கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தை குறைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி வரும் காலத்தில் அதிகம் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வடிவத்தில் அவரிடம் இருந்து இனி புதிய சாதனைகள் நிறைய வரும் என்றும் கூறப்படுகிறது.
ரன் மிஷின் விராட் கோலி
விராட் கோலியை ரன் மிஷின் என்று அழைப்பதற்கான முக்கிய காரணமே அவர் யாரையும் விட சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக ரன்கள் குறித்து வருவதுதான். அவரைத் தாண்டி சிலர் வேகமாக ரன்கள் குவித்திருக்கிறார்கள். உதாரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹஸம் ஆம்லா போன்றவர்கள்.
இப்படி விராட் கோலியை தாண்டி வேகமாக ரன் குவித்தவர்கள் ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே இன்று வரையில் தொடர்ந்து ஒரே சீராக ரன்கள் குவிப்பதை நிறுத்தாமல் செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் 20000 ரன்கள் கடந்து நிறைய புது மைல்கற்களை எட்டி இருக்கிறார்.
உடைய இருக்கும் சச்சின் சாதனை
விராட் கோலி தற்பொழுது ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 26 ஆயிரத்து 942 ரன்கள் எடுத்திருக்கிறார். மேற்கொண்டு அவர் 52 ரன்கள் எடுக்கும் பொழுது அதி விரைவாக சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்கள் எடுத்தவர் என்கின்ற சச்சின் சாதனையை முறியடிப்பார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 34357, ரிக்கி பாண்டிங் 28017, குமார் சங்கக்கரா 27483 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இவர்கள் மூவரை தாண்டி நான்காவது வீரராக 27 ஆயிரம் ரன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்தவராக விராட் கோலி இணைவார்.
இதையும் படிங்க : அர்ஷ்தீப் கலீல் அகமது இருக்க.. யாஷ் தயால் வாய்ப்பு பெற்றது எப்படி?.. வெளியான பின்னணி உண்மை காரணங்கள்
மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 152 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தால், சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் தாண்டி எடுத்த பட்டியலில் விராட் கோலியும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.