அர்ஷ்தீப் கலீல் அகமது இருக்க.. யாஷ் தயால் வாய்ப்பு பெற்றது எப்படி?.. வெளியான பின்னணி உண்மை காரணங்கள்

0
65
Dayal

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் ஜாகீர் கானுக்கு அடுத்து நல்ல இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறையாக இருந்து வந்தது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்த காலத்தில் அர்ஸ்தீப் சிங்கை கண்டுபிடித்தார்கள். ஆனாலும் அவர் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமே சரியானவராக இருக்கிறார்.

- Advertisement -

மூன்று பேர் போட்டியில் முடிவு

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் சூழலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கட்டாயம் ஒரு இடதுகை வேகப் பந்துவீச்சாளரை கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருந்தது. இதற்கான இந்திய தேர்வுக் குழுவின் ரேடாரில் அர்ஸ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயால் மூவரும் இருந்தார்கள். இறுதியாக இதில் யாஷ் தயால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடினார். ரிங்கு சிங்குக்கு கடைசி ஓவரில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் கொடுத்ததின் மூலமாக மோசமான முறையில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி இருந்தார். அதிலிருந்து வெளிவந்து தற்பொழுது சாதித்து இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.

- Advertisement -

தேர்வான காரணம்

துலீப் டிராபியில் முதல் போட்டியில் கலில் அகமது மொத்தம் ஐந்து விக்கெட் இரண்டு இன்னிங்ஸ்களில் கைப்பற்றி இருந்தார். அர்ஸ்தீப் சிங் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான சூழ்நிலையில் இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். யாஷ் தயால் நான்கு விக்கெட் கைப்பற்றி இருந்தால்.

இதில் யாஷ் தயால் ஒரு ஓவருக்கு கொடுத்த ரன்கள் மிக குறைவாக இருந்தது. அடுத்து தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட லைன் அண்ட் லென்த்தில் கண்ட்ரோல் தவறாமல் வீசினார். அதே சமயத்தில் கலீல் அகமது ஒரு விக்கெட் கூடுதலாக கைப்பற்றி இருந்தாலும் கூட, ஓவருக்கு விட்டுக் கொடுத்த ரன்கள் அதிகமாகவும், லைன் அண்ட் லென்த்தில் கண்ட்ரோல் இல்லாமலும் இருந்தார். இதுவே யாஷ் தயால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : திரும்பவும் பாகிஸ்தான் டீம் வந்தா தோற்கடிப்போம்.. 3 இல்ல 4 டிபார்ட்மெண்ட் வீக் – அமெரிக்க வீரர் அலி கான் பேட்டி

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “மற்ற இருவர்களையும் தாண்டி யாஷ் தயால் முதல் தர கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகமான போட்டிகள் விளையாடி இருக்கிறார். மேலும் துலீப் டிராபியில் அர்ஸ்தீப் வேகப்பந்துவீச்சுக்கு மிக சாதகமான ஆடுகளத்தை பெற்ற பொழுதும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே இந்த காரணத்தால் யாஷ் தயால் இந்திய அணிக்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -